சென்னை: இந்தியாவில் குவிக் காமர்ஸ் சந்தை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இத்துறையில் வர்த்தகத்தைக் கைப்பற்ற நாட்டின் அனைத்து முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களும் களத்தில் இறங்கியிருக்கும் வேளையில், தற்போது ஈகாமர்ஸ் துறையில் முன்னோடியாக இருக்கும் அமேசானும் களத்தில் இறங்கியது.
குவிக் காமர்ஸ் துறையில் முதலில் செப்டோ, பிளிங்க்இட், ஸ்விக்கி ஆகியவை மட்டுமே இருந்த நிலையில், கடந்த 6 மாதத்தில் ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், டாடா குழுமத்தின் பிக் பேஸ்கட் ஆகியவை புதிதாகக் களத்தில் இறங்கியது. இந்த 5 நிறுவனங்களுக்குப் போட்டியாக அமேசான் தற்போது களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.

அமேசான் இந்தியா, தனது புதிய குவிக் காமர்ஸ் சேவையை 'TEZ' என்ற பெயரில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. கூகுள் நிறுவனம் தனது UPI சேவையை TEZ என்ற பெயரில் தான் முதலில் அறிமுகம் செய்தது, பின்னாளில் இதை கூகுள் பே ஆக மாறியது. இப்படியிருக்கும் போது அமேசான் இதே பெயரைப் பயன்படுத்தாது. இதன் மூலம் அமேசானின் புதிய குவிக் காமர்ஸ் சேவைக்கான Codename ஆக TEZ அறியப்படுகிறது.
அமேசான் தனது குவிக் காமர்ஸ் சேவையை 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இந்த சேவை, தற்போது டிசம்பர் 2024 அல்லது அதற்கு முன்பே தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அமேசான், பிளிங்கிட், செப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக ஒரு பூதம் கிளம்ப உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் மினிட்ஸ் வர்த்தகம் மக்கள் மத்தியில் செப்டோ அளவுக்கு வளராத காரணத்தால் அமேசான் வருகை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
அமேசான் நிறுவனத்திற்குக் குவிக் காமர்ஸ் துறையில் முன் அனுபவம் இல்லை, இதேபோல் இந்தியாவில் தான் முதல் முறையாகத் தனது தேவையைத் துவங்குகிறது, இதனால் அமேசானிடம் இருந்து பெரிய மேஜிக்-ஐ இந்தியச் சந்தை எதிர்பார்க்காது. இதேவேளையில் இந்தியாவில் வர்த்தக மாடலை கற்றுக்கொண்டால் அமெரிக்காவில் இதை அறிமுகம் செய்து பெரும் வெற்றி அடைய வாய்ப்புகள் உள்ளது.
அமேசானின் குவிக் காமர்ஸ் சேவைக்கான பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், தற்போது 'தேஜ்' என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications