4,152 பேரை கோடீஸ்வரனாகிய அமேசான்.. இது ரொம்ப நல்ல விஷயம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் லாக்டவுன் காலத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தியதன் விளைவாக ஆன்லைன் ரீடைல் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தில் ஒரு அற்புதம் நடந்துள்ளது.

 

இந்தியாவில் பல லட்சம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வர்த்தகத்தைப் பெறத் துவங்கிவிட்ட நிலையில், இந்தக் கொரோனா லாக்டவுன் காலத்திலும் சுமார் 4,152 விற்பனையாளர்கள் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளனர்.

கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. பட்டையை கிளப்பும் வெள்ளி.. கணிப்பு எல்லாம் நடந்திடும் போலிருக்கே..!

4,152 கோடீஸ்வர விற்பனையாளர்கள்

4,152 கோடீஸ்வர விற்பனையாளர்கள்

அமேசான்.காம் வெளியிட்டுள்ள 2020 Small and Medium Business (SMB) Impact அறிக்கையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிறைந்த காலத்திலும் தனது தளத்தில் வர்த்தகம் தொடர்ந்து சிறப்பான அளவை அடைந்து வந்த நிலையில், தனது தளத்தில் இருக்கும் சிறு மற்றும் குறு விற்பனையாளர்கள் பிரிவில் சுமார் 4,152 பேர் அல்லது நிறுவனங்கள் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

அமேசான் இந்தியா 'crorepati' sellers

அமேசான் இந்தியா 'crorepati' sellers

1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகத்தை விற்பனையாளர்களை - அமேசான் இந்தியா 'crorepati' sellers என அழைக்கிறது. ஒவ்வொரு வருடமும் 'crorepati' sellers பிரிவு வர்த்தகர்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வருடம் சுமார் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமேசான் லாஞ்ச்பேட்
 

அமேசான் லாஞ்ச்பேட்

இதேபோல் புதிதாகப் பொருட்கள் அறிமுகம் செய்யும் நிறுவனங்கள் அமேசான் லாஞ்ச்பேட் வாயிலாகப் பட்டியலிடப்பட்டு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது அமேசான். இந்த அமேசான் லாஞ்ச்பேட் தளத்தில் பட்டியிலிடுவோரின் வர்த்தகம் கடந்த வருடத்தை விடவும் 135 சதவீதம் அதிகரித்துள்ளது என அமேசான் தெரிவித்துள்ளது.

பெண் விற்பனையாளர்கள்

பெண் விற்பனையாளர்கள்

மேலும் அமேசான் தளத்தில் பெண் விற்பனையாளர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாகவும், Saheli திட்டத்தின் கீழ் அமேசான் தளத்திற்கு வருவோரின் வர்த்தகம் சுமார் 15 மடங்கு அதிகரித்துள்ளது என அமேசான் தெரிவித்துள்ளது.

நெசவாளர்கள் மற்றும் கலைஞர்கள்

நெசவாளர்கள் மற்றும் கலைஞர்கள்

இதேபோல் நெசவாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஈர்க்கும் திட்டமான Karigar திட்டத்தில் இணையும் விற்பனையாளர்கள் 2.8 மடங்கு அதிக வர்த்தகத்தைப் பெறுகிறார்கள் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

10 லட்சம் விற்பனையாளர்கள்

10 லட்சம் விற்பனையாளர்கள்

அமேசான் தளத்தில் குறு மற்றும் சிறு வர்த்தகர்கள் பரிவில் சுமார் 10 லட்சம் விற்பனையாளர்கள் இந்தியா முழுக்க வர்த்தகம் செய்கிறார்கள் என அமேசான் இந்தியாவின் தலைவர் அமித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

2025 இலக்கு

2025 இலக்கு

2025ஆம் ஆண்டுக்குள்ள 1 கோடி குறு மற்றும் சிறு வர்த்தகர்களின் வர்த்தகத்தை டிஜிட்டல்மயமாக்க சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகம், 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon India made 4,152 'crorepati' sellers in pandemic hit 2020

Amazon India made 4,152 'crorepati' sellers in pandemic hit 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X