அமேசான் சாட்டையை இந்தியா பக்கம் திருப்புகிறது.. அச்சத்தின் உச்சத்தில் ஊழியர்கள்..!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான்.காம் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் மிகப்பெரிய பணிநீக்க திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

அமேசான்.காம் நிறுவனத்தில் இருந்து வெளியான தகவல் படி வாரத்தின் துவக்கம் முதல் கார்பரேட் மற்றும் டெக்னாலஜி பிரிவுகளில் இருக்கும் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

டிவிட்டர் மற்றும் மெட்டா நிறுவனத்தின் மாஸ் லேஃஆப் தாக்கம் இன்னும் ஊழியர்கள் மத்தியில் குறையாமல் இருக்கும் நிலையில் அமேசான் நிறுவனத்தின் பணிநீக்க செய்தி டெக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான்

அமேசான்

அமேசான் நிறுவனத்தின் விற்பனை அளவுகள் ரெசிஷன் காரணமாகப் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் அமேசான் பங்குகள் மற்றும் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பை பெரிய அளவில் பாதித்துள்ளது.

10000 ஊழியர்கள் பணிநீக்கம்

10000 ஊழியர்கள் பணிநீக்கம்

இந்த நிலையில் தான் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அமேசான் சுமார் 10000 ஊழியர்களைத் தனது உலகளாவிய அலுவலங்களில் இருந்து பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதில் இந்திய ஊழியர்களும் பாதிக்கப்பட உள்ளனர்.

ஈகாமர்ஸ் டூ வீடியோ

ஈகாமர்ஸ் டூ வீடியோ

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி அமேசான் நிறுவனத்தின் பிரம்மாண்ட பணிநீக்க நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் பல நூறு பேர் பாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் இந்தியாவில் ஈகாமர்ஸ் மட்டும் அல்லாமல் அமேசான் வெப் சர்வீசஸ்-க்காக டேட்டா சென்டர், ப்ரைம் வீடியோ பிரிவுகளிலும் அதிகப்படியான ஊழியர்களை வைத்துள்ளது.

கார்பரேட், டெக்னாலஜி பிரிவு

கார்பரேட், டெக்னாலஜி பிரிவு

அமேசான் இந்த 10000 ஊழியர்களைக் கார்பரேட், டெக்னாலஜி பிரிவில் பணிநீக்கம் செய்யப்படத் திட்டமிட்டு உள்ளதால் ஈகாமர்ஸ் பேக் என்ட் பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை. இதேபோல் இந்தப் பணிநீக்கம் Alexa டிவைசஸ் பிரிவிலும், ரீடைல் பிரிவிலும், ஹெச்ஆர் பிரிவிலும் அதிகமாக இருக்கும்.

அலெக்ஸா

அலெக்ஸா

இந்தியாவில் அலெக்ஸா வர்த்தகம் மற்றும் ஊழியர்கள் அதிகமாக இல்லை என்பதால் இந்தியாவில் இப்பிரிவு ஊழியர்களுக்குப் பாதிப்பு இருக்காது, அதேவேளையில் லாபம் அளிக்காத பிரிவாகக் கருதி மொத்த Alexa டிவைசஸ் பிரிவையும் மூடவும் வாய்ப்புகள் உள்ளது.

1,608,000 ஊழியர்கள்

1,608,000 ஊழியர்கள்

டிசம்பர் மாத நிலவரப்படி அமேசான் நிறுவனத்தில் உலகளாவிய வர்த்தகத்தில் முழு நேர மற்றும் பகுதி நேர ஊழியர்களாகச் சுமார் 1,608,000 பேர் பணியாற்றுகின்றனர். தற்போது பணிநீக்கத்தில் மொத்த வொயிட் கால் ஜாப் ஊழியர்களில் 3 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது.

500 முதல் 800 ஊழியர்கள் பணிநீக்கம்

500 முதல் 800 ஊழியர்கள் பணிநீக்கம்

தற்போதைய பணிநீக்க திட்டம் மூலம் குறைந்தது 5 முதல் 8 சதவீதம் அதாவது 500 முதல் 800 ஊழியர்கள் வரையில் அமேசான் இந்தியா அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்படலாம். சமீபத்தில் தான் அமேசான் இந்தியாவில் தனது அலுவலகத்தை அடுத்தடுத்து விரிவாக்கம் செய்தது.

ஜெப் பெசோஸ்

ஜெப் பெசோஸ்

அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோஸ் தன்னுடைய 124 பில்லியன் டாலர் சொத்துக்களில் பெரும்பகுதியைத் தனது வாழ்நாளில் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாக உலகின் 4வது பெரிய பணக்காரர் ஆக இருக்கும் ஜெப் பெசோஸ் திங்கட்கிழமை CNN-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+