ஐநாக்ஸ்-ஐ கைப்பற்ற திட்டம்போடும் அமேசான்.. இடம்கொடுக்குமா பிவிஆர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் இந்தியா அதன் வணிகத்தினை விரிவுபடுத்தும் விதமாக தொடர்ந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது அதன் பொழுது போக்கு வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக, ஐனாக்ஸ் லெய்சர் உள்பட பல பொழுதுபோக்கு நிறுவனங்களின் பங்குகளை வாங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் வருகைக்கு பின்பு பலத்த அடிவாங்கிய துறைகளில் ஒன்று இந்த மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களும். இவைகள் கொரோனா காலத்தில் மிக மோசமான சரிவினை கண்டிருந்தன.

அமேசான் சிஇஓ-வுக்கு யோகம்.. 200 மில்லியன் டாலர் ஜாக்பாட்..! அமேசான் சிஇஓ-வுக்கு யோகம்.. 200 மில்லியன் டாலர் ஜாக்பாட்..!

 வணிகத்தினை மேம்படுத்த முயற்சி

வணிகத்தினை மேம்படுத்த முயற்சி

எனினும் தற்போது பலவிதமாக கட்டுப்பாடுகளுடன் பல இடங்களில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், அதன் பொழுதுபோக்கு வணிகத்தினை மேம்படுத்தும் பொருட்டு, பல பொழுதுபோக்கு நிறுவனங்களின் பங்குகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பங்குகளை வாங்க முயற்சி

பங்குகளை வாங்க முயற்சி

ஏற்கனவே அமேசான் தனது பிரைம் வீடியோவில் பல சலுகைகள், பொழுதுபோக்கு அம்சங்களை கொடுத்து வருகின்றது. இதற்காக பல நிறுவனங்களுடன் வர்த்தக பங்காளியாக இணைந்துள்ளதுடன், பல நிறுவனங்களின் பங்குகளை கையகப்படும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.

 எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லை

எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லை

அமேசான் கடந்த 2016 முதல் இந்தியாவின் ஓவர் தி டாப் (OTT) வணிகத்தினை நடத்தி வரும் நிலையில், அதன் வணிக வளர்ச்சியானது நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இருந்த அளவுக்கு, பிற்பாதியில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அமேசான் பிரைமில் எதிர்பார்த்த வளர்ச்சியும் இல்லை எனலாம். இதற்கிடையில் தான் மூன்று அல்லது 4 நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 நஷ்டத்தில் உள்ள நிறுவனங்கள்

நஷ்டத்தில் உள்ள நிறுவனங்கள்

குறிப்பாக கொரோனாவினால் மிக மோசமான நஷ்டத்தினை கண்ட சில நிறுவனங்களுடன் தான் இந்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், சில நிறுவனங்களுடன் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிகின்றது.

கொரோனா தொற்றுக்கு முன்னர் அமேசான் இந்தியா 1.65 பில்லியன் டாலர் முதலீட்டினை செய்ததது. இந்த தொகையில் பெரும்பகுதி இ-காமர்ஸ் வணிகத்தில் முதலீடு செய்யப்பட்டது.

 

 இதில் கவனம் செலுத்தலாம்

இதில் கவனம் செலுத்தலாம்

தற்போது இ-காமர்ஸ் வணிகத்தில் பிளிப்கார்ட் நிறுவனம், முகேஷ் அம்பானியின் ஜியோமார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சந்தையில் தங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், அமேசானுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட சில பொழுதுபோக்கு நிறுவனங்களை கையகப்படுத்தினால், அமேசான் இந்த வணிகத்தில் அதிக கவனம் செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 ஐனாக்ஸ் தியேட்டர்

ஐனாக்ஸ் தியேட்டர்

நாட்டின் மிகப்பெரிய தியேட்டர் நிறுவனமான ஐனாக்ஸ் 153 மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களையும், 648 ஸ்கீரின்களையும் கொண்டுள்ளது. இதன் பெரும்பகுதி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நிலையில், அதனை தொடர்ந்து வடக்கு பகுதியிலும், தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் உள்ளன. ஐனாக்ஸ் லெய்சரின் புரமோட்டார்களிடம் 43.63% பங்கும், பொது பங்காக 56.23% உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: amazon அமேசான்
English summary

Amazon india plans to buy stake in Inox leisure and others; check details

Amazon india looking to acquiring multiple film and media distribution players, including inox leisure
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X