அமேசான் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. யாரந்த 50,000 அதிர்ஷ்டசாலிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இ -காமர்ஸ் ஜாம்பவான் ஆன அமேசான் நிறுவனம் இந்த ரணகளமான நேரத்திலும், அதிலும் பல பெரிய கார்ப்பரேட்டுகள் கூட நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், பணி நீக்கம் செய்து வருகின்றன.இந்த நிலையில் அமேசான் புதியதாக 50,000 பேரை தற்காலிகமாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு லாக்டவுனை நீட்டித்துள்ள நிலையில், சமீப வாரங்களாகவே அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களை டெலிவரி செய்ய, அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதிகள் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களூக்கு முன்பு ஆன்லைன் இ காம்ர்ஸ் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசியமற்ற பொருட்களையும் டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டது.

அமேசான் பணியமர்த்தல்

அமேசான் பணியமர்த்தல்

இதற்கிடையில் தான் தற்போது தற்காலிகமாக 50,000 பேரை பணியில் அமர்த்த அமேசான் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வரும் இந்த நிலையில் இந்த பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 50,000 பேரும் அமேசானின் கிடங்கு மற்றும் டெலிவரியில். ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதற்காக பணியமர்த்தல்?

எதற்காக பணியமர்த்தல்?

சிவப்பு மண்டலம் தவிர பச்சை ஆரஞ்சு மண்டலங்களில் சற்று இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் கூடி வருகின்றன. இதனால் இனி வரும் நாட்கள் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல்களில் ஆர்டர்கள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசானை நம்பியுள்ளவர்களுக்கு சேவை
 

அமேசானை நம்பியுள்ளவர்களுக்கு சேவை

இந்த அதிரடியான வாய்ப்பானது ஸ்விக்கி, சோமேட்டோ மற்றும் ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ள நிலையில், இந்த அதிரடியான நடவடிக்கையானது வந்துள்ளது. இவர்கள் அமேசானை பெரிதும் நம்பியுள்ள மக்களுக்கான சேவையினை அளிக்க பயன்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

என்ன வேலை?

என்ன வேலை?

இதில் பகுதி நேர வேலை வாய்ப்புகளும் அளிக்கப்படும் என்றும், இவர்களில் அதிகம் பேர் டெலிவரிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் ஏற்கனவே அமேசானில் உள்ள விநியோக கூட்டாளர்களுடன் சேருவார்கள் என்றும், அவர்கள் மேலும் வாடிக்கையாளார்களிடம் ஆர்டர்கள் எடுப்பது, அவற்றை பேக்கிங் செய்வது, அவற்றை டெலிவரி செய்வது என பல வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு உதவும் நோக்கில் சேவை

மக்களுக்கு உதவும் நோக்கில் சேவை

மேலும் கொரோனாவின் தாக்கத்தினை இந்தியா எதிர்த்து போராடுவதற்கு, சமூக தூரத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், அதனை கடைப்பிடிப்பதில் தனக்கு தனித்துவமான பங்கு இருப்பதாக அமேசான் இந்தியா உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளது. அமேசானின் இந்த சேவையானது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல், அவர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும்

ஊழியர்கள் இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும்

மேலும் தங்களது ஊழியர்களுக்கு பேஸ்மாஸ்க், மற்றும் உடல் வெப்ப நிலை, கை கழுவுதல் மற்றும் சானிடைசர் மூலம் சுத்தம் செய்தல் போன்ற பாதுக்காப்பானவற்றை ஊழியர்கள் கடைபிடிக்க கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் கட்டுப்பாடான விதிகளுக்கு மத்தியில் மீண்டும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் வர்த்தகத்தினை தொடங்கியுள்ளனர்.

என்ன ஆர்டர்கள் வருகின்றன

என்ன ஆர்டர்கள் வருகின்றன

பொதுவாக மடிக்கணினிகள் மற்றும் ஏசி, பிரிட்ஜ், போன்ற பல பொருட்களை சிவப்பு மண்டலங்களில் இருந்து ஆர்டர்களை பெறுவதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. இந்த ஆர்டர்கள் லாக்டவுன் 4.0க்கு பிறகு தற்போதுள்ள தளர்வினால் வரத் தொடங்கியுள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் இனி மெல்ல மெல்ல ஆர்டர்கள் அதிகரிக்க தொடங்கும் என்றும் அமேசான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon india to hire 50,000 temporary employees

Amazon india announced it will add 50,000 temporary roles to meet in online demand for products.
Story first published: Saturday, May 23, 2020, 12:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X