அமேசான் ஃபெஸ்டிவல் சேல் ஆரம்பம் என்றாலே அது கட்டாயம் சலுகைகளாலும், தள்ளுபடிகளாலும் இருக்கும். அதிலும் ஸ்மார்ட்போனுக்கு அதில் முக்கிய பங்கு இருக்கும்.
ஆனால் இன்று மதியம் 12 மணியிலிருந்து ஆரம்பித்துள்ள Amazon Fab Phones Fest விற்பனையில் பிரத்யேகமாக ஸ்மார்ட்போன்களுக்காகவே அதிரடியாக சலுகைகளை அறிவித்துள்ளது.
ஆக ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தவர்களுக்கு இது தான் சிறந்த காலம் என்றும் கூறப்படுகிறது.
என்னென்ன சலுகை?
குறிப்பாக சாம்சங், ஒன்பிளஸ், ஜியோமி, விவோ, ஹூவாய், ரியல்மீ மற்றும் இன்னும் பல பிராண்டுகளுக்கு 40 சதவிகிதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளதாம். இன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பித்துள்ள இந்த சலுகையானது நவம்பர் 29, 2019 வரை, 4 நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனும் சலுகை விலையில்
நான்கு நாட்கள் நடைபெற விருக்கும் இந்த விழாக்கால சலுகையில், பல சலுகைகள் வழக்கம் போல் வாரி வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக நோ காஸ்ட் இஎம்ஐ, எக்சேஞ்ச் ஆஃபர், வங்கி சலுகைகள், இது தவிர மொத்த சேத பாதுகாப்பு திட்டங்களையும் இது வழங்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இ-காமர்ஸ் நிறுவனத்தின் இணையத்தில், சமீபத்தில் வெளியான புதிய மாடல் போன்கள் கூட உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
என்ன விலை?
குறிப்பாக சமீபத்திய அறிமுக ஸ்மார்ட்போன்களான சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஐபோன்கள் கூட பட்டியிலிடப்பட்டுள்ளனவாம். உதராணத்திற்கு முன்பு 37,999 ரூபாய்க்கு கிடைத்து வந்த ஒன்பிளஸ் 7 டி தொலைபேசி, தற்போது 34,999 ரூபாய்க்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறதாம். ஐபோன் எக்ஸ் ஆர்42,900 ரூபாய்க்கு கிடைக்கிறதாம். இதன் முந்தைய விலை 47,900 ரூபாயாகும். ரெட்மி நோட் 8 ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கிறது. இது தற்போது 9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
மொபைல் உதிரி பாகங்களுக்கும் சலுகை
Amazon Fab Phones Fest-வலில் இந்த தள்ளுபடி சலுகைகள் மொபைல் பாகங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொபைல் கவர்கள், கேபிள்கள், பவர் பேங்குகள், சார்ஜர்கள் மற்றும் புளூடூத் ஹெட்செட்டுகள் உள்ளிட்ட மொபைல் பாகங்கள் 50 சதவிகிதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதே வங்கி சலுகையை பொறுத்த வரை ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு இ.எம்.ஐயில் 5 சதவிகித உடனடி தள்ளுபடியும், ஆக்ஸின் வங்கி டெபிட் கார்டு 10 சதவிகித உடனடி தள்ளுபடியும் உடனடியாக பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications