அமேசான் இந்தியா 'Womennovator' உடனான தனது கூட்டணி குறித்து அறிவித்துள்ளது. இது பெண் தொழில் முனைவோருக்கான உலகளாவிய காப்பகமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
இது உலகம் முமுக்க அவர்களது பொருட்களை விற்பனை செய்ய பெண்களுகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு கூட்டமைப்பாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் 200 பெண் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை அமேசானின் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது மேற்கொண்டு சர்வதேச அளவில் அவர்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய உதவும் என அறிவித்துள்ளது.
என்னென்ன நிறுவனங்கள்?
இதன் மூலம் இணையதளங்கள், இந்தியாவில் இருந்தும் உலகளாவிய அளவில் பிராண்டுகளை உருவாக்க முடியும் . இதில் கிட்ஷி வின்ஷி (kidsy vinshi), விசாலா நேச்சுரல்ஸ், ஜெம்ஸ் & ஜூவல்லர்ஸ் அன்ட் புங்கோ ஜங்கோ உள்ளிட்ட பல வணிகங்களும் அடங்கும்.
என்னென்ன பொருட்கள்?
இந்த தொழில் முனைவோர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜவுளி வகைகள், அழகு, ஜூவல்லரி, மசாலாக்கள், சுகாதாரம் சம்பந்தமான பொருட்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு அழகு சாதன பொருட்கள், அலுவலக பொருட்கள் என பல வகையான செயல்படுத்தப்படவுள்ளனர். இவர்கள் அமேசான் தளம் மூலம் சர்வதேச அளவில், தங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
வாய்ப்புகள் அதிகரிக்கலாம்
கூடுதலாக இந்த பிராண்டுகளுக்கு திறன் மேம்பாடு, எப்படி இந்த பொருட்களை பட்டியலிடுதல் மற்றும் விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்டவற்றை பற்றிய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும்.
இதன் மூலம் இந்திய வணிகர்களின் ஏற்றுமதி என்பது அதிகரிக்கும். இது புதிய தொழில் முனைவோருக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
இது தான் இலக்கு
இந்தியா 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து 20 பில்லியன் டாலர் மொத்த இ- காமர்ஸ் ஏற்றுமதியை செயல்படுத்துவதற்கான, எங்கள் உறுதிபாட்டை நோக்கி நாங்கள் பணியாற்றுகிறோம்.
அதேபோல வணிகர்கள் அமேசானும் இணைந்து ஏற்றுமதியை எளிதாக அணுக கூடியதாக மாற்றுவதே எங்களின் கவனமாக இருந்து வருகின்றது.
MSME-களுக்கான திட்டம்
அமேசான் குளோபல் விற்பனை என்பது ஜெப் பெசோஸ் நிறுவிய ஒரு திட்டமாகும். இது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதாக வணிகம் செய்யக் கூடிய ஒரு வாய்ப்பினை கொடுக்கும். இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எம்.எஸ். எம்.இ-க்கள் உள்ளன. இது இந்திய பொருளாதாரத்தில் 30% பங்கினை வகிக்கின்றன. இதே இந்தியாவின் ஏற்றுமதியில் 45% பங்கும் வகிக்கின்றன. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பினை வழங்கும் இரண்டாவது பெரிய துறையாகவும் உள்ளது.
எதிர்கால திட்டம்
தற்போது இந்தியா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்களின் பொருட்களை 200-க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்தும் வருகின்றனர். இந்த பொருட்களின் விற்பனையானது 5 பில்லியன் டாலர்களையும் தாண்டியுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 20 பில்லியன் டாலர்களாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications