எங்குத் திரும்பினாலும் பணிநீக்கம், ஜப்பான் முதல் அமெரிக்கா வரையில் பொருளாதார வளர்ச்சியில் சரிவு, பணவீக்கம் அதிகரிப்புக்கு மத்தியில் ரெசிஷன் அச்சம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க அனைத்து முன்னணி நிறுவனங்களும் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதை முக்கியக் கருவியாகப் பயன்படுத்தி வருகிறது.
கொரோனா
கொரோனா காலத்தில் அதிகப்படியான டிமாண்ட் இருந்த காரணத்தால் பெரும்பாலான நிறுவனத்தில் அதிகப்படியான ஊழியர்கள் சேர்க்கப்பட்டனர், இந்தப் பிரச்சனை பெரும்பாலான நிறுவனத்தில் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பணிநீக்கம் மூலம் இப்பிரச்சனையைச் சரி செய்து வருகிறது.
டெக் உலகம்
சர்வதேச டெக் உலகில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் மைக்ரோசாப்ட், மெட்டா, டிவிட்டர், சேல்ஸ்போர்ஸ், இன்டெல், ஆப்பிள் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் மெட்டா, கூகுள் போன்றவை லாபம் அளிக்காத பிரிவுகளையும், வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத பிரிவுகளையும் மூடி வருகிறது.
அமேசான்
இந்த வரிசையில் தற்போது அமேசான் நிறுவனமும் இணைந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் வர்த்தகம், வருவாய், வாடிக்கையாளர்கள் அளவில் கொரோனா காலத்திற்குப் பின்பு சில தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும் ஆப்லைன் வர்த்தகம் முதல் இதை ஈடு செய்து வருகிறது. இந்த நிலை உலக நாடுகளில் உருவாகி வரும் ரெசிஷன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஊழியர்கள்
இந்த நிலையில் பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க அமேசான் நிறுவனம் லாபம் அளிக்காத துறையின் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் படி கடந்த வாரம் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் பணியை அமேசான் நிறுவனம் நிறுத்தியது.
அமேசான் ரோபோட்டிக்ஸ் AI
இன்று ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதாக ஊழியர்களுக்கு மெமோ அளிக்கத் துவங்கியுள்ளது. லின்கிடுஇன் பதிவின் படி ஜேமி ஜாங் என்பவர் அமேசான் ரோபோட்டிக்ஸ் AI பிரிவில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார்.
ஜேமி ஜாங்
இவரின் பதிவின் படி 1.5 வருடம் அமேசான் ரோபோட்டிக்ஸ் AI பிரிவில் பணியாற்றிய பின் அவரும் அவருடைய மொத்த ரோபோடிக்ஸ் அணியும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதே லின்கிடுன் தளத்தின் தரவுகள் படி அமேசான் ரோபோட்டிக்ஸ் AI நிறுவனத்தில் 3,766 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள், இதில் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது தற்போது தெரியவில்லை.
லாபம் அளிக்காத பிரிவு
இதே வேளையில் அமேசான் குழுமத்தின் கீழ் இருக்கும் 50க்கும் அதிகமான பிரிவுகளில் லாபம் அளிக்காத பிரிவு ஊழியர்களை வேறு வேலையைத் தேடிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் சில பிரிவுகளை மூடவும் வாய்ப்புகள் உள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவிக்கிறது.
புதிய வேலைவாய்ப்புகள்
அமெரிக்க டெக் சந்தையில் அடுத்தடுத்து பெரிய நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் காரணத்தால் டெக் ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதிலும் கடினமான உள்ளது. இதைவிட முக்கியமாக ஹெச்1பி விசா பிரிவில் இருக்கும் டெக் ஊழியர்களுக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளது.
ஹெச்1பி விசா பிரிவு ஊழியர்கள்
பொதுவாக ஹெச்1பி விசா பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் 60 நாள் வேலை இல்லாமல் இருந்தால் தாய் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்பது சட்டம். இந்தச் சூழ்நிலையில் அடுத்தடுத்து டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் சந்தையில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில் பலர் தாய் நாட்டிற்கு வர வேண்டிய கட்டாயம் உருவாகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications