'இந்தியா' சர்வதேச நிறுவனங்களுக்குப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுக்கும் மிக முக்கியமான சந்தை. சீனாவின் பிரம்மாண்ட வளர்ச்சியில் உலக நாடுகளுக்குப் பங்கு கிடைக்காதது இன்று வரையில் பெரும் சோகமாக இருக்கிறது.
இந்த நிலையில் உலக நாடுகளின் சீனா + 1 கொள்கையில் இந்திய மட்டுமே இருக்கும் நிலையில் இந்தியாவின் பிரம்மாண்ட வளர்ச்சியில் எந்தக் காரணத்தைக் கொண்டும் வாய்ப்பை இழந்து விடக் கூடாது என உறுதியாகச் சர்வதேச நிறுவனங்கள் உள்ளது.
இதற்கு மத்தியில் தான் இந்தியாவில் புதிய சரக்கு போக்குவரத்து முறையைப் பிரபலமாக்க அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான அமேசான் இந்தியாவில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
அமேசான்
உலகளவில் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான், இந்தியாவில் அதன் லாஜிஸ்டிக்ஸ் தளத்தை மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு டெலிவரி சேவை மேம்படுத்தவும், வெளிநாடுகளான ஏற்றுமதி என அனைத்தையும் மேம்படுத்த பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது.
விமானச் சரக்கு போக்குவரத்து
அமேசான் இந்தியாவில் தனது சொந்த விமானச் சரக்கு போக்குவரத்து பிரிவான பிரைம் ஏர் (Prime Air) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே அமேசான் தனது Prime Air சேவையை இயக்கி வருகிறது.
இந்தியாவில் Prime Air
இதைத் தொடர்ந்து இவ்விரு சந்தையைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் பிரத்யேக விமானச் சரக்கு சேவையான Prime Air-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் முதன்முதலில் பிரைம் ஏரை அமெரிக்காவில் 2016 இல் அறிமுகப்படுத்தியது.
ஜனவரி 31க்குள்
அமேசான் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கையின் படி, அமேசான் ப்ரைம் ஏர் ஜனவரி மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது மற்றும் இந்நிறுவனத்திற்கான பேக்கேஜ்களைப் பிரத்தியேகமாக இந்தியாவுக்குள் கொண்டு செல்லும்.
இந்திய சந்தை
இதன் மூலம் அமேசானின் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் ஒரே இரவில் டெலிவரி நெட்வொர்க்கை வேகமாகவும் சொந்தமாகவும் உருவாக்க முடியும்.
குயிக்ஜெட் மூலம் இயக்கம்
பெங்களூருவை தளமாகக் கொண்ட சரக்கு விமான நிறுவனமான குயிக்ஜெட் மூலம் இந்த விமானச் சேவை இயக்கப்படும். QuickJet நிறுவனம் ஏஎஃப்எல் மற்றும் அயர்லாந்தை தளமாகக் கொண்ட ஏஎஸ்எல் ஏவியேஷன் குழுமத்தின் கூட்டணி நிறுவனமாகும்.
அமேசான் பிரைம் ஏர்
இந்தியாவில் அமேசான் பிரைம் ஏர் இரண்டு போயிங் 737-800 விமானங்களுடன் செயல்படத் தொடங்கும் மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் சரக்கு விமானங்களின் எண்ணிக்கையை இந்தியாவில் ஆறாக அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது அமேசான் நிர்வாகம்.
91 விமானங்கள்
பிரைம் ஏர் தற்போது உலகளவில் 91 விமானங்களை இயக்குகிறது, இதில் போயிங் 737, 767 ரக விமானங்களும், ஏடிஆர் விமானங்களும் அடங்கும். ஐரோப்பாவில், ASL குழுமம் Amazon இன் சரக்கு செயல்பாடுகளை நிர்வகிக்கிறது.
QuickJet வரலாறு
QuickJet 2007 ஆம் ஆண்டு Tata Capital, IL&FS மற்றும் IDFC ஆகியவற்றால் நிறுவப்பட்டது. ஆனால் அதிகப்படியான கச்சா எண்ணெய் விலை காரணமாக 2013 இல் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் QuickJet நிறுவனத்தை ASL நிறுவனம் விமானச் சேவையைப் புதுப்பிக்க உதவி தற்போது இந்தியாவில் 4 இடங்களில் இயங்கி வருகிறது.
400 கோடி ரூபாய் முதலீடு
இந்தச் சரக்கு விமானச் சேவை உட்பட அமேசான் போக்குவரத்துச் சேவைகளில் இந்நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமேசானின் சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் நிறுவனங்களிடமிருந்து ஜூன் 2022 இல் 375 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வந்த நிலையில், மீதமுள்ள முதலீடுகள் ஜனவரி 6 அன்று செய்யப்பட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications