உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான அமேசான் லாபம் தான் முக்கியம் என ஊழியர்களை கொத்துக்கொத்தாக பணிநீக்கம் செய்ய முடிவு செய்த நிலையில் 6 மாதத்தில் 2 அறிவிப்புகளில் சுமார் 27000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அமேசான் நிறுவனத்தின் சிஇஓ-வான Andy Jassy கூறினார்.
இந்த நிலையில் அமேசான் நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளை வேகப்படுத்தி வந்த நிலையில் Andy Jassy 2வது முறையாக மார்ச் மாதம் அறிவித்த 9000 பேர் பணிநீக்க அறிவிப்பில் சுமார் 500 பேர் இந்தியாவில் பணிவீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த முறை பணிநீக்கத்தில் அமேசான் நிர்வாகம் அமேசானின் வெப் சர்வீசஸ், ஹியூமன் ரிசோர்ஸ், சப்போர்ட் ஃபன்க்ஷன்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் புதிதாக பணியாளர்களை சேர்க்கும் எண்ணம் இல்லாத காரணத்தால் ஹெச்ஆர் பிரிவில் இருந்து அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது முக்கியமானதாக மாறியுள்ளது.
இதேவேளையில் அமேசான் தளத்தில் 2வது தர நகரங்களான கொச்சி, லக்னோ போன்ற பகுதிகளில் புதிய செல்லர்களை சேர்ப்பதை அமேசான் நிறுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் பிளிப்கார்ட், மீஷோ என பல ஈகாமர்ஸ் நிறுவனங்கள் உடன் கடுமையான போட்டிப்போட்டு வருகிறது. இதற்கு மத்தியில் பொருளாதார மந்தநிலை காரணமாக வர்த்தகம் குறைந்து செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

அமேசான் முதல் அறிவிப்பில் 18000 ஊழியர்களையும், 2வது அறிவிப்பில் 9000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து. இரண்டு சுற்றிலும் இந்திய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
பொதுவாக இந்திய ஊழியர்கள் மூலம் அமேசான் நிர்வாகத்திற்கு குறைந்த அளவிலான செலவுகள் மட்டுமே ஆகும் நிலையில் பணிநீக்கம் குறைவாக இருக்கும் என்பதால் பணிநீக்க எண்ணிக்கையும் சற்று குறைவாகவே இருக்கும். கடந்த 6 மாதத்தில் 2000 ஊழியர்கள் அதிகப்படியாக பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications