உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான அமேசான் 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற ஓரே காரணத்திற்காக கண்மூடித்தனமாக ஊழியர்களை கிள்ளி எறிந்தது. இதில் ஒரு ஊழியரின் கதை பல டெக் ஊழியர்களை வியக்க வைத்தது தாண்டி, அமேசான் நிறுவனத்தை அந்த ஊழியர் பழிவாங்கியது பலரின் மனதை குளிர வைத்துள்ளது.
அமேசான் நிறுவனத்தில் பிஸ்னஸ் அனலிஸ்ட் ஆக பணியாற்றிய ஒருவர் தனது பெயர் வெளியிடாமல் செய்த பதிவில், அமேசான் ஜனவரி மாதம் அறிவித்த பணிநீக்கத்தில் தான் வெளியேற்றப்பட்டதாக அறிவித்தார். ஆனால் அதன் பின்பு கடந்த 10 மாதத்தில் தன்னை மீண்டும் பணியில் சேர்க்க 4 முறை அமேசான் நிறுவனம் முயற்சி செய்ததாகவும், இதை திட்டவட்டமாக மறுத்தாகவும் தெரிவித்துள்ளார்.

அமேசான் பணிநீக்கம் செய்வதாக அறிவித்த போது தனது மேனேஜர் நீ சிறப்பாக பணியாற்றும் ஊழியர் உன்னை பணிநீக்கம் செய்ய வாய்ப்பே இல்லை என உறுதியாக கூறியுள்ளார். ஆனால் அமேசான் நிர்வாகம் மேலாளர் அணுகாமல் பணிநீக்கம் செய்தது.
இந்த ஊழியர்கள் அமேசான் நிறுவனத்தில் பல முக்கியமான திட்டத்தில் தனது சொந்த முயற்சியில் செய்துள்ளார், ஆனால் அவருடைய அணி அவரின் பெயரை சிறு பங்கீட்டை அளிப்பவர் என்ற வகையில் மாற்றியுள்ளனர். இந்த ஊழியரின் திறன் அவருடைய மேனேஜருக்கு நன்றாக தெரியும், ஆனால் நிர்வாகம் மேனேஜர்களை அணுகாமல் தன்னிடம் இருக்கும் தரவுகளை உண்மையென நம்பி பணிநீக்கம் செய்தது.
இந்த பணிநீக்கத்திற்கு பெயர் வெளியிடாத ஊழியர் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார். சுமார 200 வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தில் பெரும்பாலானவற்றுக்கு அக்காலக்கட்டத்தில் பதில் பெறவில்லை என்பதில் விரக்தி அடைந்தார்.
அமேசான் நிறுவனம் இந்த ஊழியரை பணிநீக்கம் செய்த ஒரு மாதத்தில் இந்த ஊழியரை லின்கிடுஇன் தளத்தில் அணுகி மீண்டும் பணியில் சேர அழைத்தது, மறுத்தார். அடுத்த 10 நாலில் அவருடைய முன்னாள் மேனேஜர் தனது அணியில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் அதில் சேர அழைத்துள்ளார், இதற்கும் மறுத்துள்ளார்.இதை தொடர்ந்து 2 முறை நேரடியாக அமேசான் நிறுவனத்தில் அழைப்பு வந்ததும் மறுத்துள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இக்காலக்கட்டத்தில் அவருக்கு பணியும் இல்லை, ஆனாலும் தன்மானம் காரணமாக அமேசான் நிறுவனத்தில் சேர கூடாது என திட்டவட்டமாக கவுண்டமணி க்ரீஸ் டப்பா-வை எப்படி உதைச்சது போல ஒவ்வொரு முறையும் உதைத்து ஆஃப்ரை ரிஜெக்ட் செய்தார்.
ஒரு நிறுவனம் வெளியேறிய ஊழியரை திருப்பி அழைக்கிறது என்றால் அவரால் காரியமாக வேண்டியிருக்கும், இல்லையெனில் அந்த பணியை சிறப்பாக செய்ய அவரை விட சிறப்பான ஆள் இல்லை என்பதை பொருள்.


Click it and Unblock the Notifications