உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த சில வாரங்களில் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூறியுள்ளது.
ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான அமேசான் ஏற்கெனவே சுமார் 18,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதற்கு கடந்த ஆண்டு திட்டமிட்டு ஜனவரி மாதம் இந்தியா உட்பட உலக நாடுகளில் பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், பொருளாதார சூழல் சரியில்லாததை காரணம் காட்டி கூடுதலாக 9000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய அமேசான் முடிவு செய்துள்ளது.
புதிய அறிவிப்பை வெளியிட்ட CEO!
கடந்த சில காலங்களாக அமேசான் நிறுவனத்தின் வருவாயில் பெரிதாக லாபமில்லை எனக் கூறப்பட்ட நிலையில், அதன் செலவுகளை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CEO ஆண்டி ஜாஸ்ஸி
அமேசான் நிறுவனத்தின் வருடாந்திர திட்டமிடல் செயல்முறையின் இரண்டாம் கட்டம் இந்த மாதம் நிறைவடைந்ததாகவும், அதுவே கூடுதல் பணநீக்க நடவடிக்கைக்கு வழிவகுத்ததாகவும் அமேசான் நிறுவனத்தின் CEO ஆண்டி ஜாஸ்ஸி கூறியுள்ளார். ஆனால், அமேசான் வேறு பிரிவுகளில் புதியவர்களை பணியமர்த்த இருப்பதாவும் அவர் கூறியுள்ளார்.
18000 ஊழியர்கள்
மொத்தம் 18 ஆயிரம் பணியாளர்களை நீக்கும் நடவடிக்கையில் இந்த மாதம் ஒன்பதாயிரம் பேர் நீக்கப்படவுள்ளனர். இதுதான், அமேசான் மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அதிகபட்ச எண்ணிக்கை கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
18,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அமேசான் நிறுவனத்தின் சிஇஓவான ஆண்டி ஜாஸ்ஸி கடந்த ஜனவரி மாதம் இதே காரணத்திற்காக 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தார்.
பணிநீக்கம் குறித்து ஜாஸ்ஸி அவர்கள் சென்ற ஆண்டு நவம்பர் மாதமே ஒரு விளக்கம் அளித்தார் அதில் நிறுவனம் தொடர்ந்து கடினமான பொருளாதார சரிவை எதிர்கொள்வதால், 2023 ஆம் ஆண்டில் பணியாளர்களை அதிக அளவில் பணிநீக்கம் செய்யும் என்றும் எச்சரித்திருந்தார்.
பாதிக்கப்படப்போகும் ஊழியர்கள்!
அமேசான் நிறுவனத்தில் உலகம் முழுக்க சுமார் 16 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து. தற்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கையில், பெரும்பாலானவர்கள், அலெக்ஸா வாய்ஸ் அஸிஸ்டென்ட் தொடர்பாக பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனை பிரிவை சார்ந்தவர்கள், மனிதவள பணியாளர்கள் ஆகியோர் அடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
பொருளாதார மந்தநிலை!
உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா, ட்விட்டர் உட்பட பல முன்னணி டெக் நிறுவனங்கள் தங்களின் செலவீனங்களை குறைக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
பணிநீக்கம் 2023
அதன் வரிசையில் தற்போது பிரபல ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இணைந்துள்ளது. நிறுவனத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால் மேனேஜர்கள் உட்பட சுமார் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ஜனவரி மாதம் கூறிய நிலையில், இந்த மாதம் கூடுதலாக 9000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த பணிநீக்கமானது அடுத்த ஆண்டு வரை தொடரும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications