சாட்டையை சுழற்றும் அமேசான்.. இந்தியாவில் எத்தனை டெக் ஊழியர்கள் பணிநீக்கம்..?!

உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகளாவிய தனது வர்த்தகத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் 16000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

இந்த பணிநீக்க எண்ணிக்கை இந்தியாவில் 500 முதல் 700 வரை இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள (HR) துறையில் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் முக்கியமாக சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் (SDE) பதவிகளில் இருப்போர் அதிகமாக பணியை இழந்துள்ளனர்.

சாட்டையை சுழற்றும் அமேசான்.. இந்தியாவில் எத்தனை டெக் ஊழியர்கள் பணிநீக்கம்..?!

இந்த பணிநீக்கம் அமேசானின் உலகளாவிய திட்டத்தின் ஒரு பகுதி என்பதால், உலகின் மற்ற நாடுகளிலும் அமேசான் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அமேசான் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த சுற்றில் 16,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளதாகவும், இவர்களுக்கான அறிவிப்பு செவ்வாய்கிழமை முதல் வெளியாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அமேசான் நிர்வாகம் இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணி மாற்று ஆதரவு வழங்குகிறது, அதாவது நிறுவனத்திற்குள்ளேயே வேறு பணியில் இடம்மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இதோடு severance pay, வேலை தேடுவதற்கான உதவி (outplacement services) மற்றும் உள்ளூர் விதிமுறைகளின்படி மருத்துவ காப்பீடு ஆகியவையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் அமேசான் ஒருப்பக்கம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தாலும், மறுப்பக்கம் தனது எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தொடர்ந்து ஊழியர்களை நியமிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் அமேசான் இந்தியாவில் 1,500 வரை ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. அப்போது Prime Video, மனிதவள துறை (People Experience and Technology), Q&A சாதனங்கள், ரீடைல் கடைகள், AWS ஆகிய பிரிவுகள் அதிகம் பாதிக்கப்பட்டன. சென்னை, ஹைதராபாத், பெங்களூரு அலுவலகங்களில் மடில் மற்றும் உயர் நிலை ஊழியர்கள் பெருமளவு பணியை இழந்தனர். சில பிரிவுகளில் முழு டீம் நீக்கப்பட்டன.

இந்த பணிநீக்கங்கள் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல பணிகளை ஆட்டோமேட் செய்யப்பட்டதால் இந்த பணிநீக்கத்தின் தேவை உருவாகியுள்ளது. பல பணிகள் AI மூலம் தானாக செய்யப்படுவதால் நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்கின்றன. இந்திய ஸ்டார்ட்அப்களில் 2025இல் 9,500க்கும் மேற்பட்டோர் பணியிழந்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+