அமேசான் நிறுவனம் மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் AI துறையில் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் முயற்சியில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த போராட்டத்திற்கும் பெரும் நிதி ஆதாரம் வேண்டும், இதேபோல் முக்கிய அணிகளை சிறியதாக மாற்றி செயல்திறனை அதிகரிக்க வேண்டும். இதை செய்தால் மட்டுமே ஏஐ துறையில் வளர்ச்சி அடைவதற்கான ஊழியர்களை அதிகளவில் சேர்க்க முடியும். இந்த முக்கியமான பயணத்தில் அமேசான் நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவு தான் பணிநீக்கம்.

புதன்கிழமை வெளியிட்ட வலைப்பதிவில் அமேசான் நிறுவனம் இந்த முறை 16000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை உறுதிப்படுத்தியது, கடந்த ஒரு வாரமாக இதுதொடர்பான செய்திகள் வந்தாலும் அமேசான் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
அமேசான் நிறுவனத்தின் ஊழியர்கள் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பெத் கலெட்டி, "நிறுவனத்தின் வளர்ச்சியில் நிர்வாக முடிவெடுக்கும் வேகத்தை அதிகரிக்கவும், ஊழியர்களின் பொறுப்பை அதிகரிக்கவும், நிர்வாக சிக்கல்களை அகற்றவும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்தார். இந்த பணிநீக்கம் நிறுவனத்தின் உள் செயல்பாட்டை விரைவாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கினார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்த அமேசான், அதன் CEO ஆண்டி ஜாஸி உத்தரவின்படி "உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப்" போல செயல்பட வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. AI தொழில்நுட்பம் தொழில்துறையை மாற்றி வரும் நிலையில், நிறுவனம் விரைவாக மாற்றியமைய வேண்டும் என்று ஜாஸி வலியுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் தான் பல பிரிவுகளில் பணிநீக்கம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இருப்பினும், இந்த பணிநீக்கங்கள் வழக்கமான செயல்பாடாக மாறாது என்று பெத் கலெட்டி உறுதியளித்தார். AI காரணமாக ஊழியர் எண்ணிக்கை தொடர்ந்து குறையலாம் என்று ஆண்டி ஜாஸி கூறியிருந்தாலும், நிறுவனம் தற்போது பல்வேறு காரணிகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து, பணிகளை ஆட்டோமேட் செய்து பல கட்ட சோதனைக்கு பின்பே தேவையான மாற்றங்களை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
அமேசானில் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்ப்பரேட் ஊழியர்கள் உள்ளனர். இந்த இரண்டு சுற்று பணிநீக்கங்கள் மூலம் மொத்த கார்ப்பரேட் ஊழியர்களில் சுமார் 9 சதவீதம் பேர் வெளியேற உள்ளனர். புதன்கிழமை முதல் பணிநீக்கம் தொடங்குகிறது. பெரும்பாலான ஊழியர்களுக்கு 90 நாட்கள் நிறுவனத்திற்குள்ளேயே பணியை தேடும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த முயற்யில் பணியை பெற முடியாதவர்கள் severance pay மற்றும் கூடுதலாக சில நன்மைகள் உடன் வெளியேற்றப்படுவார்கள்.
இந்த பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் மின்னஞ்சல் மூலம் பணிநீக்கம் குறித்த தகவல் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications