பெங்களூரு: அமேசான் நிறுவனம் ஈ-காமர்ஸ் மட்டுமல்லாது, அமேசான் பிரைம், அமேசான் கிண்டில், அமேசான் மியூசிக் என பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அமேசானை பொறுத்தவரை இந்தியாவில் கணிசமான சந்தையை பிடித்துள்ளது. மேலும் நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக கூடுதலாக அலுவலகங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது.
வடக்கு பெங்களூருவில் கால் பதிக்க விரும்பும் அமேசான் அதற்காக 1.1 மில்லியன் சதுர அடி பரப்பிலான அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. சாத்வா குழுமத்திடம் இருந்து அமேசான் இதனை குத்தகைக்கு எடுத்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது.

சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலேயே இருக்கக் கூடிய சாத்வா ஹாரிஸான் பிஸினஸ் பார்க்கின் 11 அடுக்கு மாடி கட்டடம் முழுவதையும் அமேசான் தான் வாங்கியுள்ளது. இங்கே 7,000 ஊழியர்கள் பணி செய்ய முடியுமாம்.
அண்மையில் அமேசான் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் தொழில்களை ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. தற்போது இந்த கட்டடத்தில் அலுவலகத்திற்கு தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்ட அலுவலகம் அடுத்த ஆண்டு மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அமேசான் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதே போல அண்மையில் அலுவலகங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. பெங்களூரு, குருகிரா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் மொத்தமாக 1.45 மில்லியன் சதுர அடிக்கு அலுவலகங்களை வாங்கியுள்ளது. அமேசான் வெப் சர்வீஸ், மேம்பாட்டு மையம், விற்பனை சேவைகள், போக்குவரத்து சேவைகள் தொடர்பான அலுவலகங்கள் இங்கே செயல்பட உள்ளன.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் முற்றிலுமாக ரிமோட் பணிகளாக இருந்தனவற்றை ஹைபிரிட் பணிகளாக மாற்றியுள்ளது. வாரத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தாக வேண்டும் என கூறியுள்ளது. எனவே தென்னிந்தியாவில் குறிப்பாக அலுவலகங்களை விரிவாக்கம் செய்கிறது. அமேசான் மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்துக்கு வர வழைத்துவிட்டன. இதனால் அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பது என்பது மார்ச் காலாண்டில் 16.2 மில்லியன் சதுர அடிகளாக அதாவது கடந்த ஆண்டை விட 43% உயர்ந்துள்ளது என Knight Frank நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் ஜிசிசி எனப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் அதிகரித்து வருகின்றன.
இவற்றுக்கான அலுவலக தேவைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. இதில் பெங்களூரு தான் முன்னிலையில் இருக்கிறது. இங்கே மார்ச் காலாண்டில் மட்டும் 3.5 மில்லியன் சதுர அடிக்கு அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications