உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான் இந்த வாரம் இரண்டாவது சுற்று பணிநீக்கத்தை தொடங்க உள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமேசான் நிறுவனத்தின் கார்ப்பரேட் ஊழியர்களில் சுமார் 30,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) முதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் அமேசான் 14,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 30,000 பணிநீக்கம் என்பது அமேசானின் 30 ஆண்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பெரிய பணிநீக்கமாக உள்ளது. மேலும் 2022இல் 27,000 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டது தான் இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய பணிநீக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமேசானின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 15.8 லட்சம் பேர், இதில் பெரும்பாலானோர் ஃபுல்ஃபில்மென்ட் சென்டர்கள் மற்றும் கிடங்குகளில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் 30,000 பேர் பணிநீக்கம் என்பது மொத்த ஊழியர்களில் சிறிய பங்குதான் என்றாலும், கார்ப்பரேட் ஊழியர்களில் பிரிவில் சுமார் 10 சதவீதத்தை பாதிக்கும் என்பதால் இதன் தாக்கம் அதிகம்.
இந்த பணிநீக்கத்தில் AWS (அமேசான் வெப் சர்வீசஸ்), ரீடைல், பிரைம் வீடியோ, மக்கள் அனுபவம் மற்றும் தொழில்நுட்பம் (எச்ஆர்) பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
உலகளவில் தற்போது டெக் நிறுவனங்கள் அனைத்தும் AI-ஐ பயன்படுத்தி கம்பியூட்டர் கோடிங் எழுதுவது, அன்றாட பணிகளை ஆட்டோமேஷன் செய்வது போன்றவை அதிகரித்து வருகின்றன. இதனால் செலவு குறைப்பது மட்டும் அல்லாமல் மனித தேவையை குறைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாகவே தற்போது பணிநீக்கங்கள் பல நிறுவனங்கள் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications