கொரோனா ஒரு பக்கம், சர்வதேச பொருளாதாரம் தொடங்கி, உள்ளூர் பொருளாதாரம் வரை எல்லோரையும் அடித்து துவைத்துக் கொண்டு இருக்கிறது.
ஆனால் பெரிய பணக்காரர்களோ, இந்த கொரோனாவைக் கூட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதற்குச் சிறந்த உதாரணம் ரிலையன்ஸ் ஜியோ.
கொரோனா காலமாக இருந்தால் என்ன? என்கிற ரீதியில், பல நிறுவனங்களுக்கு கொஞ்சம் பங்குகளை விற்று, ஆயிரக் கணக்கான கோடி ரூபாயை முதலீடாகப் பெற்று இருக்கிறது.
ஃபேஸ்புக் டீல்
ஃபேஸ்புக் நிறுவனத்துடன் கை கோர்த்த ரிலையன்ஸ் ஜியோ, தன் ஜியோமார்ட் சேவைக்கு, வாட்ஸப் செயலியில் உதவி தேவைப்பட்டது. அதற்காக டீல் செய்து கொண்டார். மற்ற கம்பெனிகளுக்கு எல்லாம் விற்றது ரிலையன்ஸின் கடனை அடைக்கத் தான். ரிலையன்ஸின் ஃபேஸ்புக் டீலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, இன்னும் சில நிறுவனங்கள், இந்தியாவின் டெலிகாம் கம்பெனிகளோடு டீல் செய்வதாகச் செய்திகள் வெளியாயின.
வொடாபோன் ஐடியா
சில தினங்களுக்கு முன்பு, உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்தியாவின் வொடாபோன் ஐடியா நிறுவனத்தில் ஒரு கணிசமான பங்கை வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. உடனடியாக வொடாபோன் ஐடியா பங்கு விலை சுமாராக 35 சதவிகிதம் வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அப்படி ஒரு டீலைக் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.
அமேசான்
ஜெஃப் பிசாஸின் நிறுவனமான அமேசான், உலகின் சில்லறை வணிகரைப் போலச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த கம்பெனி, இந்தியாவின் ஏர்டெல் டெலிகாம் கம்பெனி உடன், 2 பில்லியன் டாலருக்கு ஒரு டீல் செய்ய இருக்கிறதாம். அதுவும் குறிப்பாக ஏர்டெல்லின் பங்குகளை வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பேச்சு வார்த்தை
இந்த 2 பில்லியன் டாலர் டீல் பேச்சு வார்த்தையில் தான் இருக்கிறதாம். இந்த டீல் ஓகே ஆனால், சுமராக, அமேசான் கம்பெனி, ஏர்டெல் நிறுவனத்தில் 5 சதவிகித பங்குகளை வாங்குமாம். ஏர்டெல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவை எதிர்த்து நிற்கும் ஒரே இந்திய டெலிகாம் நிறுவனம் என்பதையும் சொல்ல வேண்டுமா என்ன?
ஜியோவை விட அதிகம்
கடந்த ஜனவரி - மார்ச் 2020 காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் ARPU 154 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. ஆனால் ஜியோவின் ARPU 131 ரூபாயாகத் தான் அதிகரித்து இருக்கிறது. இந்த ARPU விஷயத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவை தூக்கிச் சாப்பிட்டு இருக்கும் விஷயம் இங்கே நினைவு கூறத்தக்கது.
வருமானம் முக்கியம்
டெலிகாம் துறையைப் பொருத்த வரை, அதிக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதும், புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பதும் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்த ARPU - AVerage Revenue Per User கணக்கும் மிக முக்கியம். அந்த விஷயத்தில் நிச்சயம் ஏர்டெல்லைப் பாராட்டலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications