அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 14,000 பணியாளர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக, மார்க் ஸ்டான்லி பகுப்பாய்வின் அடிப்படையில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, நிறுவனத்திற்கு ரூ. 25,206 கோடி ($3 பில்லியன்) வரை சேமிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான அறிக்கையின்படி, அமேசான் தனது நிர்வாகப் பணியாளர்களை உலகளவில் 1,05,770-இலிருந்து 91,936 ஆகக் குறைத்தால், அதன் ஆண்டு செலவு 17,644 கோடி ($2.1 பில்லியன்) முதல் 30,248 கோடி ($3.6 பில்லியன்) வரை மிச்சமாகும் என்று மார்கன் ஸ்டான்லியின் பகுப்பாய்வு கூறுகிறது. இந்த முயற்சி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் போல செயல்பட்டு சிக்கனம் மற்றும் விரைவாக முடிவெடுத்தல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கான நிறுவனத்தின் ஒரு முயற்சி என்று கூறப்படுகிறது.

மறுசீரமைப்பில் ஏற்படும் மாற்றம், நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிறுவனம் குறிப்பிட்ட வேலைவாய்ப்பு குறைப்புகளை குறிப்பிடவில்லை என்றாலும், இது மேலாளர்களை புதிய பணிகளுக்கு மாற்றம் செய்யலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.
அறிக்கையின்படி, இதற்கு முன்பு நிறைய மேலாளர்களை பணியமர்த்திய அமேசான், இப்போது பணியாளர் பதவிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது, ஒவ்வொரு குழுவும் அதன் அமைப்பும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், சில ரோல்கள் எந்த வித மாற்றமும் இன்றி அப்படியே இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
மார்க் ஸ்டான்லியின் மதிப்பீட்டின்படி, அமேசானின் பணியாளர்களில் 7% பேர் மேலாளர் பதவிகளை வகிக்கின்றனர், மேலும் ஒவ்வொரு மேலாளருக்கும் ரூ. 1.6 கோடி முதல் ரூ. 2.9 கோடி ($200,000 - $350,000) வரை செலவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, அமேசான் போக்குவரத்து சேவைகள் மற்றும் தபால் துறை நாடு தழுவிய விநியோக திறன்களை அதிகரிக்க ஒரு கூட்டாண்மையை அறிவித்தன.
இரு நிறுவனங்களும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், செயல்திறனை அதிகரிப்பதற்கும், நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்குமான முயற்சி என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் 1 லட்சம் ஐடி ஊழியர்களை முன்னணி டெக் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது அமேசானும் பணி நீக்கம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது ஊழியர்களுக்கு சற்று வேதனை அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications