மீண்டும் மீண்டுமா..? டெக் நிறுவனங்களை கேள்வி கேட்க ஆளே இல்லையா? அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சி

ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை டெக் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஏஐ வந்துவிட்டது, உங்களை விட ஏஐ நன்றாக வேலை செய்கிறது, நீங்கள் ஏஐ உடன் இணைந்து செய்யவில்லை என்பதை காரணமாக கூறி ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் வேலையில் இருந்து நீக்கியுள்ளன.

2026ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மட்டும், டெக் நிறுவனங்கள் 71,000க்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக ஆராக்கிள் நிறுவனம் சுமார் 30,000 பேரை ஒரே நாளில் வேலையில் இருந்து நீக்கியது. இந்த சூழலில் உலகின் முன்னணி இகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான் கூடிய விரைவில் 14 ஆயிரம் ஊழியர்களை வேலைகளை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மீண்டும் மீண்டுமா..? டெக் நிறுவனங்களை கேள்வி கேட்க ஆளே இல்லையா? அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சி

மே மாத தொடக்கத்தில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனம் சுமார் 30,000 பேரை வேலையில் இருந்து நீக்குகிறது கடந்த ஜனவரியில் தான் இந்த நிறுவனம் சுமார் 15,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது இந்த சூழலில் மேலும் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பத்தை அதிக அளவில் தங்களுடைய அன்றாட பணிகளில் ஈடுபடுத்துவதில் அமேசான் நிறுவனம் தீவிர கவனம் செலுத்துகிறது. ஏஐ கட்டமைப்புகள், கிளவுட் அமைப்புகள் ஆகியவற்றை அதிக முதலீடும் செய்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பணிகளையும் ஏஐ தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைத்த வண்ணம் இருக்கிறது. இதனால் தங்களுடைய நிறுவன கட்டமைப்பை மாற்றி அமைத்த வண்ணம் இருக்கிறது இந்நிறுவனம்.

அமேசான் நிறுவனம் கூடுதலாக ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்தாலும் உள்ளார்ந்த தகவல்கள் இதற்கான நடவடிக்கைகளை அமேசான் கையில் எடுத்திருப்பதாகவே தெரிவிக்கின்றன. பெரும்பாலும் கார்ப்பரேட் ஊழியர்கள் தான் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும் மிட் லெவல் எனப்படும் மத்திய அளவிலான பணிகளில் இருக்கக்கூடிய ஊழியர்கள் இந்த பணி நீக்கத்தில் அதிகம் வேலை இழக்க இருக்கின்றனர்.

லாஜிஸ்டிக்ஸ் பிரிவுகளில் வேலை செய்பவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அதே வேலையில் சேல்ஸ், ஹெச்ஆர் பிரிவுகளில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய வேலையை இழக்க இருக்கிறார்கள். அதாவது மேனேஜ்மென்ட் மட்டத்தில் அதிகமான லேயர்கள் இருப்பதை குறைக்க வேண்டும் என்பதற்காக மிடில் லெவல் ஊழியர்களை இந்த முறை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+