90ஸ் கிட்ஸ்-க்கு மிகவும் பிடித்தமான டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன், ஜேம்ஸ் பாண்ட், லார்ட் ஆப் ரிங்க்ஸ், டாம் ரைடர் எனப் பல பிரபலமான திரைப்படங்களைத் தயாரித்த முன்னணி ஹாலிவுட் ஸ்டூடியோ நிறுவனமான எம்ஜிஎம்-ஐ, அமேசான் ஸ்டூடியோஸ் மற்றும் ப்ரைம் வீடியோ நிறுவனம் கடும் போட்டிக்கு மத்தியில் சுமார் 8.45 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற உள்ளது.
இந்த நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் அமேசான் ப்ரைம் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் துறையில் முன்னோடியாக இருக்கும் நெட்பிளிக்ஸ் உடன் போட்டிப்போடவும் தயாராகியுள்ளது.
மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் (MGM)
மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் என்பதைத் தான் எம்ஜிஎம் என அழைக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தனது மொத்த வர்த்தகம், சொத்துக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய முடிவு செய்தது எம்ஜிஎம் நிறுவனம்.
MGM கைப்பற்றப் போட்டி
இன்று இணையச் சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் எம்ஜிஎம் நிறுவனத்தையும் அதன் திரைப்படங்களையும் கைப்பற்ற அமேசான் மட்டும் அல்லாமல் வாய்காம் CBS மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களும் போட்டிப்போட்டு வந்தது.
ஆனால் அமேசான் நிறுவனம் ஆரம்பம் முதல் இந்த நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருந்தது.
அமேசான் ஸ்டூடியோஸ் மைக் ஹாப்கின்ஸ்
அமேசான் ஸ்டூடியோஸ் மற்றும் ப்ரைம் வீடியோ பிரிவின் உயர் தலைவர் மைக் ஹாப்கின்ஸ் தலைமையில் MGM நிறுவனத்தைக் கைப்பற்ற பல வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தையில் தற்போது முடிவு பெற்றுள்ளது.
MGM சொத்துக்கள்
MGM நிறுவனத்தைச் சுமார் 8.45 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றியதன் மூலம் அமேசான் ப்ரைம் இந்நிறுவனத்தின் 4000 திரைப்படங்கள், 17000 டிவி ஷோ ஆகியவற்றை முழுமையாகக் கைப்பற்ற உள்ளது.
MGM நிறுவன ஊழியர்கள்
இதுமட்டும் அல்லாமல் MGM நிறுவனத்தின் திறன் வாய்ந்த ஊழியர்களையும் பெற உள்ளதால் அமேசான் ப்ரைம் மற்றும் ஸ்டூடியோஸ் வர்த்தகத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என மைக் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
நெட்பிளிக்ஸ் உடன் போட்டி
அமேசான் ப்ரைம் தளத்தில் மட்டும் தற்போது 20 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், அமேசான் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 17.5 கோடி ப்ரைம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. MGM கைப்பற்றல் மூலம் நெட்பிளிக்ஸ் உடன் கன்டென்ட்-ல் மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்கள் அளவீட்டிலும் போட்டிப்போடத் தயாராகியுள்ளது அமேசான் ப்ரைம்.
அமேசான் கிளவுட் மற்றும் ரீடைல் சேவை
அமேசான் தனது கிளவுட் சேவையை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தித் தனது ப்ரைம் சேவையை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் தனது ஆன்லைன் ஷாப்பிங் சேவை மூலம் ப்ரைம் தளத்திற்கு அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது.
வார்னர் ப்ரோஸ் ஸ்டூடியோஸ்
சமீபத்தில் அமெரிக்காவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான AT&T தனது வார்னர்மீடியா பிரிவை டிஸ்கவரி இணைத்து ஸ்ட்ரீமிங் துறைக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்துறைக்குள் டிஸ்னி+, ஆப்பிள் டிவி+ ஆகியவை உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications