மாத சம்பளக்காரர்களை குறிப்பாக டெக் ஊழியர்களை கடந்த ஒரு வருடமாக மிரட்டி வரும் பணிநீக்கம் இன்னும் முடியவில்லை என நினைக்கும் போது பலரின் தூக்கம் தொலைந்து வருகிறது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் கொரோனா காலத்தில் அதிக பணபலத்தை கொண்டு இருக்கும் நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுத்து ஊழியர்களை பணியில் சேர்த்தது.

தற்போது டிஜிட்டல் சேவைகளுக்கான டிமாண்ட் குறைந்திருக்கும் வேளையில் இதே பணபலம் கொண்ட நிறுவனங்கள் கண்களை மூடிக்கொண்டு லாபம் மட்டுமே முக்கியம் என்ற கணக்கில் கொத்துத்கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து 20000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் அமேசான் தொடர்ந்து பல துறையில் அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. தற்போது ஆண்டி ஜாஸ்ஸி அமேசான் மியூசிக் பிரிவில் பணிநீக்க அறிவிப்புகளை புதன்கிழமை வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் லத்தின் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
புதன்கிழமை பணிநீக்கத்தை அமேசான் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்த நிலையில், இந்த புதிய நடவடிக்கை மூலம் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்ற விளக்கத்தை கொடுத்தனர்.
அமேசான் செப்டம்பர் காலாண்டில் சந்தை கணிப்புகளை தாண்டி அதிகப்படியான லாபம், வருவாய் ஆகியவற்றை பதிவு செய்த நிலையிலும் இந்த புதிய பணிநீக்க அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் இந்த பணிநீக்க சுற்றில் இந்தியாவில் இருந்து அதிகப்படியான பாதிப்புகள் எதுவுமில்லை எனவும் கூறலாம்.
உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான அமேசான் லாபம் தான் முக்கியம் என முடிவு செய்து வருடத்தின் முதல் 6 மாதத்தில் 2 அறிவிப்புகளில் சுமார் 27000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக இந்நிறுவனத்தின் சிஇஓ-வான Andy Jassy கூறினார்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் அமேசான் ஸ்டூடியோஸ், வீடியோ ஆகிய பிரிவில் பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது மியூசிக் பிரிவில் பணிநீக்கம் செய்துள்ளது. இப்பிரிவில் அமேசானின் சக போட்டி நிறுவனங்கள் Spotify, YouTube Music மற்றும் Apple Music ஆகியவை தான்.


Click it and Unblock the Notifications