இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்து செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனைத்து மக்களும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்தோ அல்லது வங்கியில் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் சேவை தளமாக இருக்கும் அமேசான் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை மாற்ற வங்கிகளுக்கு செல்ல வேண்டாம், இதற்கு மாறாக அமேசான் உங்களுடைய வீட்டுக்கு நேரடியாக வந்து சேவை அளிக்கிறது.

இதற்காக அமேசான்.காம் Amazon Pay Cash Load System என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் கீழ் ஒரு மாதத்திற்கு அதிகப்படியாக 50000 ரூபாய் தொகையை உங்கள் வீட்டுக்கே வந்து 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு, அதற்கு இணையான தொகையை அமேசான் பே கணக்கில் பேலென்ஸ் சேர்த்துவிடும்.
இந்த அமேசான் பே பேலென்ஸ் தொகையை மக்கள் தங்களுடைய ஆன்லைன ஷாப்பிங், கடைகளில் ஸ்கேன் அண்ட் பே, பிர ஆன்லைன் பேமெண்ட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அமேசான் பே கணக்கில் இருக்கும் பேலென்ஸ் தொகையை வங்கி கணக்கிற்கு கூட மாற்றலாம் அல்லது நண்பர்கள் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்ய முடியும்.
Amazon Pay Cash Load System என்ற புதிய சேவையை எப்படி பெறுவது..? எப்போதும் போலவே அமேசான் தளத்தில் நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் cash load-க்கு தகுதியானதா என்பதை உறுதி செய்துவிட்டு, Checkout செய்யும் போது கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் பொருள் டெலிவரி செய்யப்படும் போது டெலிவரி ஊழியரிடம் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய வேண்டும் என கூறினால் அவரே உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு உங்களின் அமேசான் பே கணக்கில் உரிய தொகையை டெபாசிட் செய்திடுவார்.


Click it and Unblock the Notifications