ஐபோன் 13 மாடல் மீண்டும் விலை குறைப்புடன் ஐபோன் பிரியர்களுக்கு கிடைக்கிறது. இதனால், இந்த சாதனத்தை குறைந்த விலையில் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அமேசான் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 42,499-க்கு விற்பனை செய்கிறது. மேலும், சில வங்கி சலுகைகளுடன் ஐபோன் 13 மாடலை ரூ. 40,000-திற்கு வாங்க முடியும்.
ஐபோன் 16 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பல்வேறு இ-காமர்ஸ் தளங்களும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. குறைந்த பட்ஜெட்டைக் கொண்டிருப்பவர்களுக்கும், ஐபோனைப் பயன்படுத்த விரும்புவோருக்கும் அமேசான் ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.

ஐபோன் 13 அமேசானில் 42,499 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விலை ரெட் கலர் மாடலுக்கு மட்டுமே. மற்ற ஷேட்களுக்கு ரூ. 1,000 அதிகமாக செலவாகும். இது 128ஜிபி ஸ்டோரேஜ்க்கான விலையாகும். இந்த சாதனத்தின் சில்லறை விலை ரூ.49,900 ஆகும். இப்போது அமேசானில் ரூ.7,410 பிளாட் தள்ளுபடி வழங்குகிறது. BOBCARD மற்றும் HSBC வங்கி கிரெடிட் கார்டுகளில் ரூ.1,750 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 13-இல் இன்னும் கூடுதலான தள்ளுபடியைப் பெற, எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் பழைய ஃபோனை மாற்றினால் அமேசான் ரூ.25,700 வரை தள்ளுபடி வழங்குகிறது. ஆனால், உங்கள் பழைய சாதனத்தின் நிலை மற்றும் நீங்கள் எவ்வளவு ஆண்டுக்கு முன்பு அந்த மொபைலை வாங்கி இருக்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும்.
A15 பயோனிக் சிப் மூலம் இயங்குகிறது. இது கேமிங் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இது பல பயனர்களுக்கு நம்பகமான தேர்வாக அமைகிறது. சந்தையில் புதிய மாடல்கள் வந்தாலும், ஐபோன் 13 தொடர்ந்து iOS புதுப்பிப்புகள் வழங்கப்படுகிறது.
வெறும் ரூ.40,000-த்தில் இரட்டை கேமராவை இந்த ஐபோன் மாடல் வழங்குகிறது. 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஆனால் புதிய ஐபோன்களில் காணப்படும் Refresh Rate இதில் இல்லை. பேட்டரி ஆயுட்காலம் சிறப்பாக உள்ளது. பெரும்பாலும் சிறிது நேரம் பயன்படுத்தினால் பேட்டரி நீடிக்கும். இருப்பினும் பேட்டரி மேம்படுத்தல்களுடன் வரும் சமீபத்திய மாடல்களைப் போல இது இருக்காது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஐபோன் 13 செயல்திறன், கேமரா ஆகியவை சிறப்பாக உள்ளது. ஆனால் இந்த ஐபோன் சார்ஜருடன் வரவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சார்ஜர் வாங்க நீங்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கலாம்.


Click it and Unblock the Notifications