இன்றைய இளம் தலைமுறையினர், கூகுள்-ஐ எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதே அளவுக்கு சாட்டிங் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு தளமான Chatgpt பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு தளமாக இருக்கிறது. இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் ஜெமினி என்பதை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் உலகின் பிரபல நிறுவனமான அமேசான், அலுவல் பணிக்காக ஊழியர்கள் யாரும் Chatgpt போன்ற தளங்களை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு அமேசான் அனுப்பிய மின்னஞ்சல்: உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான அமேசான் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் வேலை தொடர்பான நோக்கங்களுக்காக சேட் ஜிபிடி போன்ற மூன்றாம் தரப்பு உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவதைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிசினஸ் இன்சைடர் பெற்ற தகவல்களின்படி அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அண்மையில் ஒரு மின்னஞ்சலை அனுப்பி உள்ளது. அதில் ரகசிய தகவல்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அமேசான் வலியுறுத்தியுள்ளது.
ஜெனரேடிவ் ஏஐ கருவிகளை பயன்படுத்துவதால் பணிகள் எளிதாக முடியும், ஆனால் ரகசிய பணிகளுக்கு அதை பயன்படுத்தாமல் இருப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தகவல்களுக்கு உரிமம் கோர நேரிடலாம்: மூன்றாம் தரப்பு உருவாக்கும் ஏஐ கருவிகளை பயன்படுத்தும் போது, அமேசானின் நம்பகமான தகவல்கள், வாடிக்கையாளர் அல்லது பணியாளர் தரவையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நிறுவனம் வெளிப்படையாக எச்சரித்துள்ளது.
மூன்றாம் தரப்பு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் தொடர்பான கொள்கையில், அத்தகைய கருவிகளுடன் தொடர்புடைய சாத்தியமான அபாயங்களை முன்னிலைப்படுத்துகின்றன.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஊழியர்களால் உள்ளிடப்பட்ட எந்த ஒரு உள்ளடக்கத்திற்கும் உரிமம் கோரும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்கள், ஆவணங்கள் மற்றும் முன் வெளியீட்டுப் பொருட்கள் போன்ற பலவிதமான வெளியீடுகள் இதில் அடங்கும். ஏற்கனவே சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களும் ஊழியர்கள், மூன்றாம் தரப்பு செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதே போன்றதொரு நடவடிக்கையை அமேசானும் எடுத்திருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓபன்ஏஐ-இல் செய்துள்ள குறிப்பிடத்தக்க முதலீடு, மைக்ரோசாப்டின் ஈடுபாடு அத்தகைய மாதிரிகளால் உருவாக்கப்பட்ட முடிவுகளுக்கான உரிமைகளை அவர்கள் எடுத்து கொள்வதற்கான வாய்ப்பை எழுப்புகிறது. மைக்ரோசாப்ட் கூட ஓபன்ஏஐ-யில் முதலீடு செய்த போதிலும் அதன் ஊழியர்கள் அந்த கருவிகளை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆடன் மாண்டோமரி கூறுகையில் நீண்ட காலமாக அமேசானே ஜெனரேடிவ் ஏஐ உருவாக்கம் மற்றும் பெரிய அளவிலான இயந்திர கற்றல் மாதிரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஊழியர்கள் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.
ஆனால் நிறுவன ரகசிய தகவல் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என கூறினார்.
Story written by: Devika
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications