சென்னை: அமேசான் பே அதன் வாடிக்கையாளர்களுக்கு யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் கிரெடிட் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை அமேசான் நிறுவனம் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் சேர்ந்து அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. இது பல்வேறு பேமெண்ட்களுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கூற்றுப்படி, அமேசான் பே இந்தியாவின் இயக்குனரான விகாஷ் பன்சால் வாடிக்கையாளர்கள் சொல்லும் கருத்தை மேம்படுத்துவது எங்களின் முக்கிய குறிக்கோளாகும். மேலும் இதனை செயல்படுத்த NPCI உடன் நாங்கள் இணைந்துள்ளோம். யுபிஐ ஆப்களில் கிரெடிட் என்பது முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார். இந்த கிரெடிட் ஆப்ஷன் ஐ பயன்படுத்தி மாத தவணையாக பேமெண்ட் செய்யலாம்.

கிட்டத்தட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஷாப்பிங், பில் செலுத்துதல், ரீச்சார்ஜ், பிறருக்கு பணம் அனுப்புதல் போன்ற பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு அமேசான் பே, ஆப்பை பயன்படுத்துகின்றனர்.
அமேசான் பைனான்ஸ் இந்தியா, Axio, IDFC ஃபர்ஸ்ட் பேங்க், கரூர் வைஸ்யா பேங்க் போன்ற வங்கிகளுடன் இணைந்து "Buy Now Pay Later" சர்வீஸ்களை மக்களுக்கு வழங்கி வருகின்றது. இதனால் அமேசான் நிறுவனம் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது.
சிறிய கடைகள் யுபிஐ யை அதிகம் பயன்படுத்தாததால், UPI பேமெண்ட்டுகளுக்கு கிரெடிட் ஆப்ஷன் பயன்படுத்துவது கடினமாக இருக்கலாம். அனால், அமேசான் நிறைய வடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, மேலும் யுபிஐ அதிகமாகப் பயன்படுத்த விரும்பும் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தை இந்த ஆப்ஷன்னை பயன்படுத்தி மாத தவணையாக செலுத்த முடியும்.
அமேசான் பே 350 க்கும் மேற்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான வணிகம், உள்ளூர் கடைகள் போன்றவற்றை அமைத்துள்ளது. இங்கு டாக்ஸி முன்பதிவு, ஃபுட் டெலிவரி, மூவி டிக்கெட், பஸ் டிக்கெட் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் 10,000 ஆன்லைன் விற்பனையாளர்களால் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அமேசான் பே பயன்படுத்தும் முக்கிய பிராண்டுகளில் உபேர் , சொமேடோ,ஸ்விக்கி, டாமினோஸ் மற்றும் புக் மை ஷோ ஆகியவை அடங்கும்.
அதனுடன், அமேசான் பே, RBL வங்கியுடன் இணைந்து, UPI கட்டணங்களைச் செயல் படுத்தி வருகிறது. FASTag ரீசார்ஜ்களுக்காக ICICI வங்கியுடன் சேர்ந்து செய்கிறது. மேலும் Amazon Pay ICICI கோ பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. பிப்ரவரியில், அமேசான் பே, இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து (ஆர்பிஐ) பேமெண்ட் உரிமத்தைப் பெற்றுள்ளது.
அமேசான் நிறுவனம் 20 ஸ்மார்ட் ஸ்டோர்களை கொண்டு வர இருப்பதாக அறிவிப்பு வெளியானது. HP, Prestige, Oppo மற்றும் Himalaya போன்ற பிராண்டுகள் தற்போது தங்கள் பொருட்களை வழங்குகின்றன. இன்னும் பல்வேறு ஸ்மார்ட் ஸ்டோர்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications