இந்தியாவில் அமேசான் நிறுவனம் தன்னுடைய நிதி சேவைகளை படிப்படியாக விரிவாக்கம் செய்து வருகிறது. முதலில் அமேசான் பே செயலி மூலம் யுபிஐ சேவைகளை வழங்க தொடங்கியது. தற்போது இதில் முதலீட்டு வாய்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது.
அமேசான் நிறுவனம் 8% வரை வட்டி தரும் புதிய Fixed Deposit திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் அமேசான் பே என்ற செயலி வாயிலாக ஃபின்டெக் சேவையை வழங்கி வருகிறது. யுபிஐ, டிராவல் புக்கிங், விமான டிக்கெட் பதிவு, சினிமா டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. தற்போது இதில் ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு தொகை திட்டமும் சேர்ந்துள்ளது.

அமேசான் பே செயலி வாயிலாகவே நாம் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 8% வரை வட்டி தரக்கூடிய வகையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதற்காக வங்கிகளை கூட்டாளிகளாக இணைத்து ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஷிவாலிக் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், ஸ்லைஸ் அண்ட் உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் மற்றும் ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றோடு இணைந்து அமேசான் பே இந்த ஃபிக்ஸட் டெபாசிட் சேவையை வழங்குகிறது.
இதன்படி நாம் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து இதில் முதலீடு செய்யலாம் . எந்த வங்கியை நாம் தேர்வு செய்கிறோம் அந்த முதலீடு காலத்தை பொருத்தும் ஆண்டுக்கு 8 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். ஸ்ரீராம் பைனான்ஸில் இணைந்து எஃப்டி முதலீடு செய்தால் பெண்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி கிடைக்கும் என அமேசான் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதே போல முத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி கிடைக்கும்.
அமேசான் பே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விகாஸ் இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. பெரிய அளவிலான ரிஸ்க் கிடையாது, எளிமையான முறையில் முதலீடு செய்யலாம், உத்தரவாதமான வருமானம் கிடைக்கிறது என்பதால் இன்றும் லட்சக்கணக்கான மக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களை தான் நம்புகிறார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் அமேசான் பே இப்படி ஒரு வசதியை கொண்டு வந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் நிதி சார்ந்த தங்களுடைய தொழில்நுட்ப சேவைகளை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதி தான் இது என தெரிவித்திருக்கிறார் . அமேசான் பே-இன் இந்த டெபாசிட் திட்டத்தை பொருத்தவரை அவர்களோடு பார்ட்னராக இருக்கக்கூடிய வங்கி அல்லது வங்கி சாராத நிதி அமைப்புகளிடம் வாடிக்கையாளர்கள் இதற்காக தனியாக ஒரு சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டிய அவசியமில்லை . நேரடியாக அமேசான் பே வாயிலாகவே கணக்கை தொடங்கி விடலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 2025 நிலவரத்தின்படி இந்தியாவின் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படக்கூடிய முதல் பத்து யுபிஐ செயலிகளில் அமேசான் பே முன்னணி இடம் பிடித்திருக்கிறது. மொத்தம் இந்த நிறுவனம் இந்த செயலி வாயிலாக 8 . 9 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன இவற்றின் மதிப்பு 10, 147 கோடி ஆகும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications