உலகளவில் முன்னணி ஈ காமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமாக இருக்கிறது அமேசான் நிறுவனம். அமேசான் , அமேசான் வெப் சர்வீஸ், அமேசான் பிரைம் என பலதுறைகளிலும் கால் பதித்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் 1.38 மில்லியன் பேர் பணிபுரிகின்றனர்.
கடந்த அக்டோபரில் தான் அமேசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் சுமார் 14,000 பேரை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புது ஆண்டு தொடங்கி முதல் மாதம் தான் நடைபெற்று வருகிறது. ஆனால் மீண்டும் ஒரு பணி நீக்க அறிவிப்பை வெளியிடுவதற்கு அமேசான் நிறுவனம் தயாராகி இருக்கிறதாம். அடுத்த வாரத்தில் அமேசான் நிறுவனம் சுமார் 14,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது லட்சக்கணக்கான அமேசான் ஊழியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தத்தில் அமேசான் நிறுவனத்தில் 1.58 மில்லியன் பேர் பணி புரிகின்றனர். இந்த ஊழியர்களின் பெரும்பாலானவர்கள் கிடங்குகள் மற்றும் பல்வேறு மையங்களில் பணிபுரிகிறார்கள். கார்ப்பரேட் ஊழியர்கள் சுமார் 10% பேர் உள்ளனர். இந்த சூழலில் 14000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் அறிவிப்பை அமேசான் அடுத்த வாரம் வெளியிட இருக்கிறதாம்.
அமேசான் வெப் சர்வீஸ், அமேசான் ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் ஹெச்ஆர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட உள்ளனர். கடந்த அக்டோபர் மாதமே அமேசான் நிறுவனம் சுமார் 14000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. அப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மிக தீவிரமாக பயன்படுத்த போவதாக தெரிவித்தது.
ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு நவீன மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது , இன்டர்நெட் வருகைக்குப் பிறகு நிறுவனங்கள் வேலை செய்யும் விதத்தையே மாற்றி அமைக்கக்கூடிய ஒரு புரட்சிகர தொழில்நுட்பமாக ஏஐ வளர்ந்து நிற்கிறது. எனவே தொடர்ந்து அதில் கவனம் செலுத்த போகிறோம் என அப்போதே அமேசான் தெரிவித்திருந்தது. அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆண்டி ஜெஸ்ஸி ஊழியர்கள் பணிநீக்கம் என்பது நிதி ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல , ஏஐ ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல நிறுவனத்தில் பல்வேறு படிநிலைகளில் ஊழியர்கள் இருக்கிறார்கள் இதனால் முடிவுகள் எடுப்பதில் தாமதமாகிறது வேலையை முடிப்பது தாமதமாகிறது எனவே அந்த படிநிலைகளை குறைக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் எதிர் வரக்கூடிய காலங்களில் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் போது ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என முன்கூட்டியே தெரிவித்திருந்தார். அமேசானில் கோடிங் உள்ளிட்ட வேலைகள் படிப்படியாக ஏஐ ஏஜெண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இது தவிர கிடங்குகளில் மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களை பயன்படுத்தவும் அமேசான் தயாராகி வருகிறது.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications