தெலுங்கானாவில் ரூ.20,761 கோடி முதலீடு செய்யும் அமேசான்.. தமிழ்நாடு ஜஸ்ட் மிஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம், தெலுங்கானவில் 20,761 கோடி ரூபாய் மதிப்பில் தரவு மையத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானா வரலாற்றிலேயே இப்படி ஒரு மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீட்டினை, பெறுவதில் மகிழ்ச்சி என்றும் அம்மாநிலம் அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் தரவு மையங்களை அமைக்க, அமேசான் வெப் சர்வீசஸ் 207.61 பில்லியன் ரூபாய் முதலீட்டினை இறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் 2022ன் ஆண்டின் நடுத்தர காலத்தில் செயல்பாட்டுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தூள் கிளப்பிய சென்செக்ஸ்.. 550 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. என்ன காரணம்..!

மூன்று தரவு மையங்கள்
 

மூன்று தரவு மையங்கள்

இந்த முதலீட்டின் மூலம் தெலுங்கானாவில் அமேசான் மூன்று டேட்டா சென்டர்களை தொடங்கலாம் என்று ஹிந்துஸ்தான் செய்திகள் கூறுகின்றது. ஒன்று பவர், மற்றொன்று குளிரூட்டல், பிசிகல் செக்யூரிட்டி, நெட்வொர்க் வழியாக செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விருப்பமான இடமாக மாறலாம்

விருப்பமான இடமாக மாறலாம்

அமேசான் இந்த அதிரடி திட்டத்தினால், எதிர்காலத்தில் இன்னும் பல நிறுவனங்கள் தெலுங்கானாவில் தங்களது தரவு மையங்களை அமைக்க விருப்பமான இடமாக மாறலாம். அமேசான் இந்த டேட்டா சென்டர், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை பல மடங்கு ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கேடிஆர் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

பல தரப்பினருக்கும் உதவும்

பல தரப்பினருக்கும் உதவும்

அமேசானின் இந்த இந்த டேட்டா மையம், இன்னும் அதிகமான டெவலப்பர்கள், ஸ்டார்டப் நிறுவனங்கள், எண்டர்பிரைசஸ், அரசு, கல்வி, லாபம் நோக்கற்ற நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை இயக்குவதற்கும், பயனர்களுக்கும் இது உதவும் வகையில் அமைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பல துறையினருக்கும் ஆதரவாக அமையும்
 

பல துறையினருக்கும் ஆதரவாக அமையும்

அதோடு ஒரு பிராந்தியத்தில் டேட்டா மையங்களை நிறுவுவது, ஈ-காமர்ஸ் துறை, பொதுத்துறை. வங்கித் துறை, நிதித்துறை, இன்சூரன்ஸ், வங்கி அல்லாத துறை, ஐடி உள்ளிட்ட பல துறைகளின் செயல்பாட்டினை இது அதிகரிகும். எனினும் தற்போது ஐடி துறையில் ஹைதராபாத் மிக உயர்ந்த வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது என்றும், பல புதுமையான ஸ்டார்டப் நிறுவனங்கள், மற்றும் திறமையான தொழிலாளர்கள் என பலரும் உள்ளனர் என்று கேடிஆர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா அரசின் சப்போர்ட் தான் காரணம்

தெலுங்கானா அரசின் சப்போர்ட் தான் காரணம்

அமேசான் தெலுங்கானவை தேர்தெடுத்ததற்கு காரணம் வலுவான கட்டமைப்பு, அரசின் ஆதரவு உள்ளிட்ட பல காரணங்கள் உண்டு என்று கூறப்படுகிறது.

தெலுங்கானா அரசு தொடங்கப்பட்டதில் இருந்து (ஜூன் 2014ல் இருந்து) அரசு ஈர்த்துள்ள மிகப்பெரிய முதலீடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த மிகப்பெரிய முதலீடு உண்மையில் மற்ற துறையிலும் அன்னிய முதலீடுகளை ஈர்க்க நங்கூரமாக அமையும். ஹைதராபாத்தில் மிகப்பெரிய அலுவலகத்தினை கொண்ட அமேசான், தற்போது அதன் உறவினை தெலுங்கானாவுடன் மேலும் வலுப்படுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon plans to invest Rs.20,761 crore in telangana

Telangana govt announced plans to set up multiple data centres in telangana at an estimated investment of Rs 20,761 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X