அமேசான் வரலாற்று வீழ்ச்சி.. 7 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்..!

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் யாரும் எதிர் பார்க்காத வகையில் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. டெக்னாலஜி தான் எல்லாம், ஆன்லைன் சேவைகள் தான் இனி எதிர்காலம், ரீடைல் விற்பனை கடனை அனைத்தும் இனி தேவையில்லை எனக் கூட்டம் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அமேசான் 7 வருடத்தில் முதல் முறையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது அமேசான் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல், அமேசான்-ஐ நம்பி முதலீடு செய்த அனைத்து முதலீட்டாளர்களும், முதலீட்டு நிறுவனங்களுக்கும் பெரும் ஏமாற்றமாக உள்ளது.

அமேசான்

அமேசான்

அமேசான் கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு காலாண்டில் நஷ்டத்தைப் பதிவு செய்ததுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் அளவில் ஏற்பட்ட சரிவு, பணவீக்கம் மற்றும் சப்ளை-செயின் பிரச்சனைகள் மற்றும் மின்சார வாகன ஸ்டார்ட்அப்கள் மீதான முதலீட்டில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றால் ஏற்படும் அதிகச் செலவுகள் காரணமாக அமேசான் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

அமேசான்.காம் இன்க் நிறுவனத்தின் வருவாய் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் சுமார் 7% உயர்ந்தது. மக்கள் கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்திற்குத் திரும்பிய காரணத்தால் மக்கள் கடைகளில் அதிகப் பணத்தைச் செலவழிக்கும் காரணத்தால் அமேசான் தளத்தில் ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.

3.8 பில்லியன் டாலர் நஷ்டம்

3.8 பில்லியன் டாலர் நஷ்டம்

இதன் மூலம் மார்ச் காலாண்டில் அமேசான் 7 வருடத்தில் இல்லாத வகையில் சுமார் 3.8 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த வருடத்தின் மார்ச் காலாண்டில் அமேசான் சுமார் 8.1 பில்லியன் டாலர் லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிவியன்

ரிவியன்


டெஸ்லா நிறுவனத்திற்குப் போட்டியாக அமேசான் முதலீடு செய்திருந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான ரிவியன் ஆட்டோமோட்டிவ் இன்க்., இந்த ஆண்டு மட்டும் அதன் பங்குகள் 65%க்கும் அதிகமாகச் சரிவைக் கண்டுள்ளது.

ரிவியன் நஷ்ட அளவு

ரிவியன் நஷ்ட அளவு

அமேசான் இந்த ரிவியன் நிறுவனத்தில் தோராயமாக 18% பங்குகளைக் கொண்டுள்ளது. இந்தப் பங்கு இருப்பு வாயிலாக 7.6 பில்லியன் டாலர் அளவிலான முந்தைய வரி இழப்பை அமேசான் எதிர்கொண்டு உள்ளது.

14 சதவீத சரிவு

14 சதவீத சரிவு

இந்தக் காலாண்டு முடிவுகள் மூலம் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 14 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இது ஜூலை 2006 க்குப் பின்பு அமேசான் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

206.2 பில்லியன் டாலர் இழப்பு

206.2 பில்லியன் டாலர் இழப்பு

அமேசான் முதலீட்டாளர்கள் காலாண்டு முடிவுக்குப் பின்பு அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில் வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 206.2 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை சந்தித்துப் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது, அமேசான்.

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ்

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ்

இதுவரையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் தான் ஒரே நாளில் அதிகப்படியான சந்தை மதிப்பீட்டை இழந்த முன்னணி நிறுவனமாக இருந்தது. இந்த வரிசையில் தற்போது அமேசான் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. மெட்டா பிளாட்பார்ம்ஸ் 2022 பிப்ரவரி மாதத்தில் $251.3 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்த நிலையில் அமேசான் தற்போது 206.2 பில்லியன் டாலரை இழந்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

நாஸ்டாக் 100

நாஸ்டாக் 100

டெக் நிறுவன பங்குகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்த நிலையில் நாஸ்டாக் 100 இன்டெக்ஸ் வெள்ளிக்கிழமை 4.5% சரிந்தது, அதன் மூலம் மொத்த ஏப்ரல் சரிவு 13% ஆக உயர்ந்தது. இது அக்டோபர் 2008 க்குப் பிறகு அதன் மிகப்பெரிய ஒரு மாத வீழ்ச்சியாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+