இன்றைய பொழுதுபோக்கு விஷயங்களில் OTT மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை, பட்ஜெட் போட்டுக் குடும்பத்தை நடத்தும் மக்களுக்குத் தியேட்டருக்குப் போய்ப் படத்தைப் பார்க்கும் செலவுகளை ஒப்பிடுகையில் OTT தளத்தில் வருடம் முழுவதும் புதிய படங்களைக் குறைவான செலவில் பார்க்க முடியும் என்பது நன்கு அறிவார்கள். (200 ரூபாய்க்கு பாப்கார்ன் வாங்கும் போது இருக்கும் மன குமுறல் அப்பா, அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்)
இந்த வகையில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவுக்கான கட்டணம் டிசம்பர் 14ஆம் தேதி அதிகமாகிறது.
அமேசான் ப்ரைம் சேவை
அமேசான் ப்ரைம் சேவையின் கட்டணம் டிசம்பர் 14ஆம் தேதியில் இருந்து சுமார் 50 சதவீதம் வரையில் அதிகமாகிறது. வருடாந்திர திட்டத்திற்கு மட்டும் அல்லாமல் மாதாந்திர மற்றும் காலாண்டு திட்டங்களின் கட்டணமும் பெரிய அளவில் உயரப்போகிறது. இதனால் பட்ஜெட் போட்டுக் குடும்பத்தை நடத்துவோர் முன்கூட்டியே திட்டமிட்டால் குறைவான தொகைக்கு அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் பெற முடியும்.
கட்டண உயர்வு
டிசம்பர் 14ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்-ன் மாதாந்திர கட்டணம் 38.76 சதவீதம் அதிகரித்து 129 ரூபாயில் இருந்து 179 ரூபாயாகவும், 3 மாதத்திற்கான கட்டணம் 39.51 சதவீதம் அதிகரித்து 329 ரூபாயில் இருந்து 459 ரூபாய் வரையில் அதிகரிக்க உள்ளது. மேலும் வருடாந்திர கட்டணம் 50.05 சதவீதம் அதிகரித்து 999 ரூபாயில் இருந்து 1499 ரூபாய் வரையில் அதிகரிக்க உள்ளது.
டிசம்பர் 14
இப்புதிய கட்டணம் டிசம்பர் 14ஆம் தேதி 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கிடையில் ரினவல் செய்வோர் பழைய விலையில் பெற முடியும். இந்தக் கட்டண உயர்வை அக்டோபர் மாதமே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் கட்டண உயர்வு தற்போது இருக்கும் ப்ரைம் வாடிக்கையாளர்களை எவ்விதத்திலும் பாதிக்காது.
ப்ரைம் மெம்பர்ஷிப்
2016ல் அமேசான் தனது ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையை அறிமுகம் செய்தது, முதலில் ஷாப்பிங் சேவைக்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது வீடியோ ஸ்ட்ரீமிங், மியூசிங், புத்தகம் எனப் பல சேவைகளை வழங்குகிறது. முதல் வெறும் 499 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம் 2017ல் 999 ரூபாய்க்கும், 2021 டிசம்பரில் 1499 ரூபாய்க்கும் உயர்த்தி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications