சமீபகாலமாக ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு, அந்தந்த நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. ஏனெனில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளை ஒரே ஒருவர் சப்ஸ்கிரைப் செய்துவிட்டு பாஸ்வேர்டை பிறருக்கும் வழங்கி பயன்படுத்தி வந்ததை தொடர்ந்து புதிய விதி அமல்படுத்தப்பட்டது. எனவே இதைத் தடுக்கும் பொருட்டு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல அமேசான் பிரைம் வீடியோவும் தற்போது பாஸ்வேர்ட் பகிர்வு குறித்த விதிகளை இந்தியாவில் கொண்டு வரவுள்ளது.
இந்த விதிகள் 2025-ஆம் ஆண்டு முதல் கொண்டு வரப்படவுள்ளது. புதிய விதிகளின்படி அமேசான் பிரைம் வீடியோவை சப்ஸ்கிரைப் செய்த ஒரு பயனர் தங்கள் கணக்குகளில் அதிகபட்சமாக 5 டிவைஸ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதிலும் குறிப்பாக 2 டிவிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

மின்ட் அறிக்கையின்படி, ஒரு நபர் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்க்கு பணம் செலுத்தியிருந்தால், வீட்டில் இருக்கும் 5 டிவைஸ்களில் பிரைம் வீடியோவை பார்க்க முடியும் என்று அமேசான் பிரைம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மெயிலில் தெரிவித்திருக்கிறது. இந்த விதி ஜனவரி 2025 முதல் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
நீங்கள் எந்தெந்த சாதனங்களில் அமேசான் பிரைம் வீடியோவை நிர்வகிக்கிறீர்கள் என்பதை உங்கள் செட்டிங்சில் மாற்றியமைத்து கொள்ளலாம். இன்னும் அதிக அளவிலான டிவைஸ்களில் பிரைம் வீடியோவை பார்க்க விரும்பினால் அதற்கு மற்றொரு ப்ரைம் மெம்பர்ஷிப்பை வாங்க வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது அமேசான் பிரைம் உறுப்பினர்கள் எந்தவித வரம்புகளும் இன்றி 10 டிவைஸ்கள் வரை பயன்படுத்த முடியும்.
வரவிருக்கும் புதிய விதியின் மூலம் ஒருவர் 5 டிவைஸ்களில் பயன்படுத்த முடியும் என்றாலும், 2 டிவிகளில் மட்டுமே ப்ரைம் மெம்பர்ஷிப்பை பயன்படுத்தலாம். அதோடு இந்தியாவில் விளம்பரமே இல்லாத புதிய பிரைம் சப்ஸ்கிரிப்ஷனை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன் பேக்கேஜ்: தற்போது அமேசான் பிரைம் வருடாந்திர பேக்கேஜிற்கு ரூ. 1499 வசூலிக்கிறது. இதற்கு ப்ரைம் வீடியோ, அமேசான் ஃப்ரீ டெலிவரி போன்ற பல அம்சங்கள் கிடைக்கிறது. காலாண்டு பேக்கேஜ்-க்கு ரூ.599 வசூலிக்கப்படுகிறது. மாதம் மாதம் பணம் செலுத்துபவராக இருந்தால் ரூ.299 செலுத்தி ஸ்ட்ரீமிங் சேவையைப் பெறலாம்.
பல பயனர்கள் ஒரே மெம்பர்ஷிப்பை பயன்படுத்தி பாஸ்வேர்டை பகிர்ந்து ஸ்ட்ரீமிங் சேவைகளை பெறுகின்றனர். இதனால் புதிய வாடிக்கையாளர்களின் வரத்து குறைந்து நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு தான் தற்போது ஸ்ட்ரீமிங் சேவைகள் தங்களுடைய வளர்ச்சியை அதிகரிக்க சில முக்கிய விதிகளை வகுத்துள்ளன.


Click it and Unblock the Notifications