அமேசான் பிரைம் தங்களது வாடிக்கையாளருக்கு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது அமேசான் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக அமேசான் நிறுவனம் HBO நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் காரணமாக அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ள இன்ப அதிர்ச்சி என்ன? என்பதை தற்போது பார்ப்போம்.
அமேசான் ப்ரைம் - HBO ஒப்பந்தம்
அமேசான் பிரைம் வீடியோ 11 பிரபலமான HBO மேக்ஸ் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் 10 HBO மேக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்களை இந்தியாவில் உள்ள அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கவுள்ளது. இதற்காக வார்னர் பிரதர்ஸ் இன்கார்பரேட்டட், டிஸ்கவரியுடன் அமேசான் ப்ரைம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை
இதுகுறித்து அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் உள்ளடக்க உரிம இயக்குனர் மனிஷ் மெங்கானி அவர்கள் கூறியபோது, 'அமேசான் பிரைம் வீடியோவில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்து கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். மேலும் பிளாக்பஸ்டர் அமேசான் ஒரிஜினல்ஸ் முதல் சமீபத்திய யுஎஸ் டிவி நிகழ்ச்சிகள் வரை பிரீமியம் சர்வதேச உள்ளடக்கத்தை இந்தியர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
வார்னர் பிரதர்ஸ்-டிஸ்கவரி
இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்களுக்கு பிரத்யேகமாக சமீபத்திய மற்றும் மிகவும் பிரபலமான HBO Max Original தொடர் மற்றும் சில அம்சங்களை வழங்க உள்ளோம். குறிப்பாக வார்னர் பிரதர்ஸ் மற்றும் டிஸ்கவரி உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
சூப்பர் ஹீரோ தொடர்கள்
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட சூப்பர் ஹீரோ தொடர்களின் பல சீசன்கள், இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகள், க்ரைம் நாடகங்கள் மற்றும் மர்ம தொடர்கள் உள்பட பல நிகழ்ச்சிகள் இதில் அடங்கும். பிரத்தியேகமான HBO மேக்ஸ் ஸ்லேட் வழங்கும் அம்சத்தை எங்கள் வாடிக்கையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
என்னென்ன தொடர்?
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் இனி அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் டார்க் காமெடி த்ரில்லர் 'தி ஃப்ளைட் அட்டெண்டன்ட்', கேலி குவோகோ நடித்த அனைத்து வகைகளிலும் தொடர்கள், டிசி சூப்பர் ஹீரோ தொடரான 'பீஸ்மேக்கர்', ஜான் சேனா நடித்த தொடர், 'செக்ஸ் அண்ட் தி சிட்டி'யின் புதிய அத்தியாயம், 'புதிய காசிப் கேர்ள்', 'அசல் பாப் கலாச்சார கிளாசிக் தொடர்', மிண்டி கலிங் மற்றும் ஜஸ்டின் நோபல் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 'காலேஜ் கேர்ள்ஸின் செக்ஸ் லைவ்ஸ்' என்ற கல்லூரி-தொகுப்பு நகைச்சுவை தொடர் ஆகியவைகளை கண்டு ரசிக்கலாம்.
டிஸ்கவரி
மேலும் டிஸ்கவரியின் புனைகதை அல்லாத சர்வதேச பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள், வார்னர்மீடியாவின் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் செய்தி தொகுப்புகள் ஆகிய நிகழ்ச்சிகளையும் அமேசான் வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications