இந்திய மக்களை எப்படி கேபிள் டிவிகள் ஆட்கொண்டு இருந்ததோ, அதேபோல் தற்போது இளம் தலைமுறையினரை டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளம் ஆட்கொண்டு உள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம் முடிந்த பின்பு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் இப்பிரிவில் இருக்கும் ஹாட்ஸ்டார், Amazon Prime, Netflix ஆகியவை தனது வர்த்தகத்திற்கு ஏற்ப கட்டணத்தை மாற்றியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ஜியோ சினிமா பெற்றுள்ள நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறையவில்லை என்றாலும் சப்ஸ்கிரிப்ஷன்-ஐ ரினிவல் செய்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும் என்பது உறுதி.

இப்படியிருக்கையில் சந்தையில் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பிரிவில் தற்போது போட்டி என பார்த்தால் Amazon Prime மற்றும் Netflix மத்தியில் தான். நெட்ஃபிக்ஸ் அதன் திட்டங்களின் விலைகளைக் குறைத்த சில நாட்களுக்குப் பிறகு, அமேசான் ப்ரைம் அதற்கு நேர்மாறாகச் விலையை அதாவது சப்ஸ்கிரிப்ஷன் கட்டணத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமேசான் பிரைம் அதன் உறுப்பினர்களின் கட்டணத்தை 67 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்களின்படி, அமேசான் பிரைம் சேவைக்கு மாதம் ரூ.299 செலுத்த வேண்டும். இதே மாதாந்திர திட்டத்தின் பழைய விலை 179 ரூபா். மேலும் 3 மாத பேக்கேஜுக்கு, அமேசான் பிரைம் 459 ரூபாய்க்கு மாறாக ரூ.599 ஆக உயர்த்தியுள்ளது.
அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் வருடாந்திர திட்டங்களில் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அமேசான் பிரைம் லைட் மெம்பர்ஷிப்பிற்கு ரூ.999 செலுத்த வேண்டும், இதுவே முழு மெம்பர்ஷிப்பிற்கு வருடம் 1499 ரூபாய் செலுத்த வேண்டும்.
Amazon Prime மெம்பர்ஷிப் மூலம் வெறும் வீடியோ கன்டென்ட் மட்டும் அல்லா்மல் அதன் Amazon ஷாப்பிங், இசை போன்ற பிற முக்கிய சேவைகளையும் வழங்குகிறது. ஆனால் நெட்பிளிக்ஸ் தளத்தில் வீடியோ கன்டென்ட் மட்டுமே உள்ளது. மொபைல் எனில் வீடியோ கேம் சேவைகள் கிடைக்கும்.

புதன்கிழமை, நெட்ஃபிக்ஸ் அதன் சந்தா கட்டணத்தை 20-60% குறைத்தது. புதிய விலை நிலவரத்தின் படி நெட்பிளிக்ஸ் மொபைல் திட்டம் மாதத்திற்கு 149 ரூபாயும், பேசிக் திட்டத்திற்கு மாதம் 199 ரூபாயும், ஸ்டாண்டர்டு திட்டத்திற்கு மாதம் 499 ரூபாய் செலுத்த வேண்டும். இதுவே ப்ரீமியம் திட்டத்திற்கு மாதம் 649 ரூபாய் செலுத்த வேண்டும்.
சரி எது பெஸ்ட், நீங்கள் அதிகம் ஆங்கிலம் மற்றும் பிற மொழி படங்கள், வெப் சீரியஸ்-களை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு நெட்பிளிக்ஸ் தான் பெஸ்ட். இதுவே நீங்கள் அதிகம் இந்திய மொழி மொழி படங்கள், வெப் சீரியஸ்-களை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு அமேசான் ப்ரைம் பெஸ்ட்.
மேலும் மொபைலில் Amazon Prime, Netflix பார்பவராக இருந்தால் நெட்பிளிக்ஸ்-க்கு மாதம் 149 ரூபாய் செலுத்த வேண்டும், முன்பு இது 199 ரூபாயாக இருந்தது. இதுவே அமேசான் ப்ரைம் ஆக இருந்தால் 199 ரூபாய், ஆனால் வருடாந்திர திட்டத்திற்கு 1499 ரூபாய் மட்டுமே.


Click it and Unblock the Notifications