இந்திய ரீடைல் சந்தையின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும், ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் வர்த்தக விற்பனை ஒப்பந்தத்திற்கு அமேசான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இடையிலான வர்த்தகப் பரிமாற்றம் நடக்கக் கூடாது என இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான் தொடர்ந்து இந்திய நீதிமன்றம், சிங்கப்பூர் நடுவர் அமைப்பு ஆகியவற்றில் வழக்குகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பியூச்சர் குரூப் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் முக்கியமான தகவல்களைச் சமர்ப்பித்துள்ளது.
40 மில்லியன் டாலர் வேண்டும்
பியூச்சர் குரூப் சமர்ப்பித்த அறிக்கையில், அமேசான் நிறுவனத்தின் கார்பரேட் வளர்ச்சி மற்றும் தனியார் முதலீடுகள் பிரிவின் தலைவர் அபிஜித் மசும்தார், பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானியிடம் நஷ்டஈடாக 40 மில்லியன் டாலர் கொடுத்தால் ஒப்பந்தத்திற்குத் தடையாக இருப்பதில், இருந்து அமேசான் விலகிக்கொள்ளத் தயாராக இருப்பதாக வாய்மொழியில் கூறியதாகத் தெரிவித்துள்ளதாகப் பியூச்சர் குரூப் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமேசான் வாபஸ்
இந்த 40 மில்லியன் டாலர் தொகையின் மூலம் அமேசான் முதலீடு செய்துள்ள பியூச்சர் ரீடைல் தொடர்புடைய சொத்துக்களைப் பியூச்சர் குரூப் விற்பனை செய்வதில் அமேசான் தனது எதிர்ப்பை விலக்கிக்கொள்ளும் என்பது பொருள். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை வாய்மொழியில் நடந்த காரணத்தால் இதற்கு ஆதாரம் இல்லை என்றும் பியூச்சர் குரூப் தெரிவித்துள்ளது.
அமேசான் தலைவர் அமித் அகர்வால்
மேலும் பியூச்சர் குரூப் சமர்ப்பித்த அறிக்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சர் குரூப் இடையிலான பேச்சுவார்த்தை குறித்துப் பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி அவ்வப்போது அமேசான்.காம் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரான அமித் அகர்வால்-யிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமேசான் முதலீடு
ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சிங்கப்பூர் நடுவர் அமைப்பின் முதற்கட்ட விசாரணையில் அமேசானுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், கடனில் தவிக்கும் பியூச்சர் குரூப்-ல் அமேசான் தொடர்ந்து அதிகமாக முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது என அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் - ரிலையன்ஸ் ரீடைல் போட்டி
இந்திய ரீடைல் சந்தையில் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரீடைல் பிரிவுக்கும் ஏற்கனவே கடுமையான வர்த்தகப் போட்டி நிலவி வரும் நிலையில், பியூச்சர் குரூப் உடனான பேச்சுவார்த்தையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் முந்திக்கொண்ட நிலையில் தற்போது அமேசான் அடுத்தடுத்த வழக்குப் போட்டு வருகிறது. இதனால் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் முடங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications