உலகின் முன்னணி ஈகாமர்ஸ் வர்த்தக சாம்ராஜ்ஜியமான அமேசான், தற்போது இந்தியாவை முக்கிய வர்த்தக தளமாக கொண்டு இயங்கி வருவது மட்டும் அல்லாமல் குவிக் காமர்ஸ் வர்த்தகத்தை மிகப்பெரிய திட்டமாக செயல்படுத்தி வருகிறது.
அமேசான் நிர்வாகம் தனது இந்திய வர்த்தகத்தில் ஏற்கனவே ஈகாமரஸ், இந்தியாவில் இருந்து உலகளவில் ஏற்றுமதி செய்வது, டேட்டா சென்டர், ஏஐ, கிளவுட் சேவை என பல பிரிவில் பெரும் முதலீடுகளை செய்துள்ள நிலையில், தற்போது புதிதாக புதுப்பிக்கதக்க எனர்ஜி பிரிவில் பெரும் முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் பெரியளவில் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் காரணத்தால் நீண்ட கால அடிப்படையில் இந்த மின்சார செலவுகளை குறைக்கும் வண்ணம் 2030க்குள், அதாவது அடுத்த 4 வருடத்திற்குள் இந்திய புதுப்பிக்கதக்க எனர்ஜி துறையில் சுமார் 7 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளது.
ஏற்கனேவே இப்பிரிவில் 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் வேளையில், இப்புதிய முதலீடு இந்திய Renewable Energy துறைக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் வேளையில், இதற்கான செலவுகளை குறைக்கவும், இந்தியாவின் நெட் ஜீரோ டார்கெட்-ஐ அடையும் விதிமாக கிளீன் எனர்ஜி துறையில் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்த புதிய முதலீட்டின் மூலம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கார்பன் ஃப்ரீ மின்சாரம் வாங்கும் நிறுவனமாக உயரும் என கணிக்கப்படுகிறது.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 934 மெகாவாட் (MW) மின்சார உற்பத்தித் திறன் கொண்ட 4 புதிய காற்றாலை மற்றும் சோலார் மின்சார உற்பத்தி திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் 2 கர்நாடகாவிலும், மற்ற இரண்டு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் செயல்படுத்த உள்ளது. இந்த 4 திட்டத்திற்கும் power purchase agreements செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமேசான் தற்போது இந்தியாவில் 2 ஜிகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க எனர்ஜி கட்டமைப்பை ஒப்பந்த முறையில் வைத்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள புதிய 7 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் 2030க்குள் அமேசான் தனது மொத்த வர்த்தகத்தில் சுமார் 65 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் மூலம் இயக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அமேசான் தனது வர்த்தகத்தின் மூலம் ஏற்படும் கார்பன் உமிழ்வை குறைக்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
