உலகிலேயே நாங்கள் தான் வல்லரசு என தனது காலரை தூக்கிவிட்டு கொண்ட அமெரிக்கா, இன்று கொரோனாவின் மையமாக உள்ளது.
கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனால், மக்கள் இன்று வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை நிலவி வருகிறது.
மேலும் அத்தியாவசிய தேவை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு கூறி வருகிறது.
ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரிப்பு
அதிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலும் ஒட்டுமொத்த துறையும் முடங்கி போனாலும், ஆன்லைன் மளிகை வியாபாரம் மட்டும் ஓயவில்லையாம். அந்தளவுக்கு ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றனவாம். ஒரு புறம் ஆள் பற்றாக்குறையால் ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வரும் இந்த நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை தவிர்த்து வருகின்றனவாம்.
டெலிவரி செய்வதிலும் தாமதம்
மேலும் தங்களது குடோன்களில் சரக்கு இருப்பும் குறைந்து வருவதால் மற்ற மொத்த வியாபாரிகளிடம் வாங்கி தான் சில இடங்களில் டெலிவரி செய்து வருகின்றனவாம். இதனால் ஆர்டர்களை டெலிவரி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.
ஆர்டர்கள் தள்ளி வைப்பு
அதுமட்டும் அல்ல ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆர்டர்களுக்கே இன்னும் டெலிவரி செய்யப்படாத நிலையில், புதிய ஆர்டர்களை தள்ளி வைத்து வருகின்றதாம். அதிலும் முன்பு இருந்ததை விட தற்போது ஆன்லைன் ஆர்டர்களும் அதிகரித்துள்ளனவாம். ஆனால் முன்னர் 80 இடங்களில் இருந்து பொருட்களை வாங்கி வந்த நிலையில், தற்போது 150 இடங்களில் வாங்க வேண்டியுள்ளதாம்.
குவிந்து வரும் ஆர்டர்கள்
அமேசான் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசானில் முன்பு இருந்ததை விட, கொரோனா பரவத் தொடங்கிய இந்த காலத்தில் 60% அதிகமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை சமாளிப்பதற்காகத் தான் அமேசான் புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
முக்கிய பங்கு வகிக்கும் டெலிவரி நிறுவனங்கள்
அதிலும் சமூக விழிப்புணர்வு, போதுமான இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் முடிந்தால் பாதுகாப்பாக அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள ஊக்குவிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. எப்படியோங்க.. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், அதிலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் மக்கள் வெளியே வருவதை தடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications