பெங்களூரு வணிக நிறுவனங்களுக்கான மிகப்பெரிய புகலிடமாக இருந்து வருகிறது. இங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் தொழில் துறை நிறுவனமான ஹனிவெல் பெங்களூரில் தங்கள் அலுவலக குத்தகையை மீண்டும் புதுப்பித்துள்ளன. அதே நேரத்தில் அமெரிக்க எலக்ட்ரானிக் டிசைன் ஆட்டோமேஷன் நிறுவனமான சினாப்சிஸ் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டு சுமார் 4.3 லட்சம் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தத் தகவல்களை ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு தளமான Propstack பகிர்ந்துள்ளது.
அமேசான் டெவலப்மெண்ட் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்: வெளியான தகவல்களின்படி அமேசான் டெவலப்மெண்ட் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட், பிசினஸ் பார்க்கில் சுமார் 6.76 லட்சம் சதுர அடியிலான அலுவலக இடத்தை 5 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதற்கு மாத வாடகையாக ரூ. 4.92 கோடி செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் 18-ஆம் தேதி 2024-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் பாக்மேனிய டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் புருஷோத்தமா என்ற தனிநபர் குத்தகைக்காரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் 1.11 கோடி முத்திரைக் கட்டணம் மற்றும் ரூ.56.4 லட்சம் பதிவுக் கட்டணத்துடன் போடப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டின் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் 15 சதவீத வாடகை அதிகரிப்பு அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை விடப்பட்ட இடம் 10 தளங்களைக் கொண்டது. மேலும் ஆவணங்களின் படி மொத்தம் 940 கார்களை பார்க்கிங் செய்யும் வசதியைக் கொண்டுள்ளது அதுமட்டுமின்றி அமேசான் நிறுவனத்திற்கு கூடுதலாக 5 ஆண்டு காலத்திற்கு குத்தகையை புதுப்பிப்பதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் லேப் பிரைவேட் லிமிடெட்: Propstack மூலம் பகிரப்பட்ட ஆவணங்களின்படி தொழில்துறை நிறுவனமான ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் லேப் பிரைவேட் லிமிடெட் கிழக்கு பெங்களூரில் இருக்கும் ஆர்.எம்.எஸ் ஈகோ வேர்ல்ட்-இன் பிளாக் 3A, B மற்றும் C ஆகியவற்றில் உள்ள 5.9 லட்சம் சதுர அடி அளவிலான அலுவலக இடத்திற்கான குத்தகையை மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்துள்ளது. ஆகஸ்ட் 26, 2024 முதல் குத்தகைக் காலம் தொடங்கியுள்ளதாக Propstack ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 30, 2024 அன்று போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஆர்லிகா ஈகோ வேர்ல்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் குத்தகைக்காரராக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ரூ.57.54 லட்சம் முத்திரைக் கட்டணமும், ரூ.28.82 லட்சம் பதிவுக் கட்டணமும், ரூ.19.82 கோடி செக்யூரிட்டி டெபாசிட்டும் கட்டப்பட்டுள்ளது.
ஆரம்ப மாத வாடகையாக ரூ.2.41 கோடியும், ஒப்பந்தம் தொடங்கிய தேதியிலிருந்து 24 மாதங்களுக்குப் பிறகு 10% வாடகை அதிகரிப்பு இருக்கும் என்று ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 787 கார்கள் நிறுத்தும் இடமும் அடங்கும்.
சினாப்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்: எலக்ட்ரானிக் டிசைன் ஆட்டோமேஷன் நிறுவனமான சினாப்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாக்மேனே கேபிடல் ட்ராய்யில் 4.3 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை, மாதத்திற்கு ரூ. 4.19 கோடி தொடக்க வாடகைக்கு ஏழு ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 30, 2024 அன்று பதிவு செய்யப்பட்டு, குத்தகைதாரராக 'பாக்மனே டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் அண்ட் அதர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வெளியான ஆவணங்களின்படி, பரிவர்த்தனைக்கு ரூ.1.09 கோடி முத்திரை கட்டணமும், ரூ.54.56 லட்சம் பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அதில் ரூ.25.18 கோடி மதிப்புள்ள செக்யூரிட்டி டெபாசிட்டும் அடங்கும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பெங்களூருவில் 7.1 மில்லியன் சதுர அடி அலுவலக இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3.4 மில்லியன் சதுர அடியாக இருந்தது. ஆனால் தற்போது அதிகரித்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications