அமைந்தகரை முதல் அமெரிக்கா வரையில் தற்போது டெக் நிறுவனங்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்து வருகின்றன. ஒருப்பக்கம் ஏஐ தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் மாற்றப்போகிறது என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், இந்த ஏஐ மாற்றத்திற்கு தயாராக வேண்டும் என்பது தான் அனைத்து நிறுவனங்களின் முக்கிய திட்டமாக உள்ளது.
ஏஐ துறையில் இறங்க வேண்டும் என்பது எளிதான காரியமில்லை, மிகப்பெரிய முதலீடுகள் தேவை என்பதால் அனைத்து டெக் நிறுவனங்களும் தற்போது தங்களுடைய சொந்த நிறுவன செயல்பாடுகளை ஏஐ மூலம் மாற்றிவிட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது மூலம் செலவை குறைத்து, ஏஐ-க்கான முதலீட்டை திரட்டும் நோக்கில் உள்ளது.

இந்த நிலையில் உலகளாவிய முன்னணி இ-காமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான், தனது மனிதவளத் துறையில் 15 சதவீத ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் மனிதவளத் துறையான பீப்பிள் எக்ஸ்பீரியன்ஸ் டெக்னாலஜி (PXT) பிரிவு இந்த பணிநீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இது மட்டுமல்லாமல், அமேசானின் முக்கிய நுகர்வோர் வணிகப் பிரிவுகளிலும் சில பணியிடங்கள் குறைக்கப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
அமேசானின் PXT பிரிவு, மூத்த துணைத் தலைவர் பெத் கேலட்டியின் கீழ் இயங்குகிறது. இந்தப் பிரிவில் உலகளவில் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இதன் மூலம் 1500 பேர் இப்பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் ஏற்கனவே 25000த்திற்கும் அதிகமான ஊழியர்களை கடந்த 2-3 ஆண்டுகளில் பணிநீக்கம் செய்துள்ள வேளையில், தற்போது மீண்டும் புதிய பணிநீக்க சுற்றை துவங்கியுள்ளதாக டெக் ஊழியர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
அமேசான் நிர்வாகம் இந்த பணிநீக்கத்தின் மூலம் மொத்த எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட போகிறார்கள் அல்லது எப்போது பணிநீக்கம் செய்யப்படும் என்பது குறித்து துல்லியமான தகவல்களை வெளியிடவில்லை. இந்த பணிநீக்கம், நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் நிர்வாகம் இந்த ஆண்டு தொடக்கத்தில், அமேசான் நுகர்வோர் சாதனங்கள் பிரிவு, வொண்டரி பாட்காஸ்ட் பிரிவு மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் ஆகியவற்றில் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதால் மற்ற முன்னணி டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யுமா என்ற கேள்வியும், அச்சமும் உருவாகியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications