சுடசுட அறிவிப்பை வெளியிட்ட அமேசான்..! ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு.. 1.3 லட்சம் பேருக்கு வேலை..!

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி அண்டி ஜாஸ்ஸி, இந்தியாவில் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்பிற்கு பின்பு சுந்தர் பிச்சை கூகுள் விரைவில் குஜராத் GIFT CITY-யில் குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டரை துவங்க உள்ளதாகவும், அதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 பில்லியன் டாலர் மதிப்பிலான India Digitisation Fund தொகையை முதலீடு செய்ய துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சுடசுட அறிவிப்பை வெளியிட்ட அமேசான்..! ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு.. 1.3 லட்சம் பேருக்கு வேலை..!

இந்த அறிவிப்பின் ஆர்பாட்டம் அடங்கும் முன்பே அமேசான் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வையை இந்திய பக்கம் திருப்பியுள்ளது என்றால் மிகையில்லை.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி அண்டி ஜாஸ்ஸி, இந்தியாவில் 15 பில்லியன் டாலர் அதாவது இன்றைய டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் படி கிட்டதட்ட 1,20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் அமேசான் நிறுவனத்தின் மொத்த முதலீட்டு அளவு 26 பில்லியன் டாலராக உயர உள்ளது.

இதுக்குறித்து அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி அண்டி ஜாஸ்ஸி தனது டிவிட்டரில் பிரதமர் மோடியுடன் நான் மிகவும் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டேன். அமேசான் இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றாகும், அமேசான் நிர்வாகம் இன்று வரை சுமார் 11 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளோம்.

இந்த நிலையில் இந்தியாவில் புதிதாக 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் மொத்த முதலீட்டு தொகை இந்தியாவில் 26 பில்லியன் டாலராக உயர உள்ளது. இந்தியா, அமேசான் மத்தியிலான கூட்டணி எதிர்காலத்திலும் வலுவான முறையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று ஜஸ்ஸி தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்தார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்பில் அண்டி ஜாஸ்ஸி, இந்தியாவில் அமேசான் எப்படி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவுகிறது, வேலைவாய்ப்பை உருவாக்குகிறது, எப்படி இந்திய விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்ய உதவுகிறது என்பது குறித்து ஆலோசனை செய்தாக தெரிவித்தார்.

அமேசான் நிறுவனம் ஏற்கனவே தனது கிளவுட் சேவைக்காக 11 பில்லியன் டாலர் தொகையை 2030க்குள் முதலீடு செய்ய உள்ளதாக அறிலித்துள்ளது. இந்த 26 பில்லியன் டாலர் முதலீடுகள் மூலம் இந்தியாவில் 1.31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+