அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்களுடைய முதலீட்டை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றன . கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் விரிவாக்கம் மற்றும் டேட்டா மையங்கள் அமைப்பது உள்ளிட்டவைகளுக்காக பல லட்சம் கோடிகளை முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன.
இந்த சூழலில் கூகுள், மைக்ரோசாப்டை எல்லாம் பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனம் இந்தியாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 31.48 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது கூகுளின் 15 பில்லியன், மைக்ரோசாப்டின் 17.5 பில்லியன் டாலர் முதலீடுகளை விட இரண்டு மடங்கு அதிகம்.

அமேசான் நிறுவனம் சர்வதேச அமெரிக்க தவிர்த்து மற்றொரு நாட்டில் செய்யக்கூடிய மிகப்பெரிய ஒரு முதலீடு இது என சொல்லப்படுகிறது. அமேசான் கடந்த 2010 ஆம் ஆண்டு தான் இந்தியாவிற்குள் நுழைந்தது . அப்போது இருந்து தற்போது வரை 40 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறது. ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே தங்களுடைய முதலீட்டில் கூடுதலாக 35 பில்லியன் டாலர்களை சேர்ப்பதாக தெரிவித்திருக்கிறது.
வேலை வாய்ப்பு உருவாக்கம் , டெலிவரியை வேகப்படுத்துவது , மற்றும் இ-காமர்ஸ் தளத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காகஇந்த பணம் செலவிடப்படும் என அமேசான் நிறுவனம் கூறியிருக்கிறது. அமேசான் நிறுவனம் தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் 2030 ஆம் ஆண்டுக்குள் அமேசான் இந்தியாவில் 10 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என கூறியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 15 மில்லியன் சிறு வணிகர்களுக்கு நவீன ஏஐ பலன்கள் கொண்டு சேர்க்கப்படும் என்றும் சிறு வணிகர்களுக்கு ஏஐ சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்து இருக்கிறது. 40 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏஐ பயிற்சி வழங்க போவதாகவும் அமேசான் கூறி இருக்கிறது .
அமேசான் நிறுவனம் இகாமர்ஸ் மட்டும் இல்லாமல் தற்போது குயிக் காமர்ஸ் பிரிவிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. 10 நிமிட டெலிவரி என்ற இலக்கோடு அமேசான் நிறுவனம் செப்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட், பிக்பாஸ்கெட் மற்றும் ப்ளிப்கார்ட் மினிட்ஸ் ஆகியவற்றோடு போட்டியிட தொடங்கி இருக்கிறது . இதற்காக இந்தியாவில் தன்னுடைய டார்க் ஸ்டோர்களை வலுப்படுத்தி வருகிறது.
இந்தியாவின் ஒவ்வொரு மெட்ரோ நகரங்களிலும் ஒரு நாளைக்கு இரண்டு புதிய டார்க் ஸ்டோர்களை திறப்போம் என்றும் ஆண்டு இறுதிக்குள் 300 இடங்களில் புதிய டார்க் ஸ்டோர்கள் திறக்கப்பட்டு இருக்கும் என்றும் அமேசான் நிறுவனம் உறுதி அளித்து இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications