முதல்ல கூகுள்.. இப்போ அமேசான்.. அணுசக்தி திட்டங்களில் முதலீடு செய்யும் டெக் நிறுவனங்கள்..!

அமேசான் நிறுவனம் அணுமின் சக்தி திட்டங்களுக்காக 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்திற்கு உட்பட்ட கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவுதான் அமேசான் வெப் சர்வீசஸ். இந்த நிறுவனம் சார்பாக அணுசக்தி திட்டங்களில் 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் 3 அணு உலைகளை அமைப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம் கூறியுள்ளது.

அமேசான் நிறுவனம் பூஜ்ஜிய கார்பன் வெளியீடு என்ற இலக்கை அடைவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச அளவில் தற்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத நடைமுறைகளில் மின்சாரங்களை தயாரிக்க பல்வேறு நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

 முதல்ல கூகுள்.. இப்போ அமேசான்.. அணுசக்தி திட்டங்களில் முதலீடு செய்யும் டெக் நிறுவனங்கள்..!


அந்த வகையில் கூகுள் நிறுவனம் கூட அண்மையில் தங்களுடைய செயற்கை நுண்ணறிவு டேட்டா மையங்களுக்கான மின்சாரத்தை அணு சக்தி மூலம் தயாரித்து பயன்படுத்துவது என முடிவு செய்து, அது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போது அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனமும் தங்களுடைய ஜெனரேட்டிவ் ஏஐ சேவைகள் மற்றும் டேட்டா மையங்களுக்கான மின்சாரத்தை அணுசக்தி மூலம் தயாரித்து பயன்படுத்துவது என அறிவித்துள்ளது.

இதற்காக அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம் டொமினியான் எனர்ஜி என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து சிறிய அளவிலான அணு உலைகளை அமைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரித்து பயன்படுத்த உள்ளன.

பாரம்பரிய அணு உலைகளுடன் ஒப்பிடும்போது இந்த அணு உலைகள் அளவில் சிறியவை மேலும் விரைவாக இதன் கட்டுமான பணிகளை முடித்து விடலாம். அதுமட்டுமின்றி 24 மணி நேரமும் மின்சாரத்தை தயாரித்து வழங்கும் திறன் கொண்டவை. தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் அணுசக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு முன் வந்துள்ளன.

மைக்ரோசாப்ட் நிறுவனமும் அணுசக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தங்களுடைய டேட்டா மையங்களுக்கு பயன்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மேத்யூ கார்மென் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற அதேவேளையில் அதற்கான டேட்டா மையங்களின் தேவையும் அதிகரிக்கிறது எனவே இவற்றுக்கு மின்சாரமும் அதிக அளவில் தேவைப்படும் என கூறியுள்ளார். இதனை அணுசக்தி மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பெரும்பாலான டேட்டா மையங்கள் வெர்ஜினியா மாகாணத்தில் தான் அமைந்திருக்கின்றன. இதில் 452 டேட்டா மையங்களுக்கு தேவையான மின்சாரத்தை டொமினியான் எனர்ஜி நிறுவனம் தான் வழங்குகிறது. கிட்டத்தட்ட 3500 மெகாவாட் மின்சாரத்தை இது வழங்குவதாக தெரிகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்த டேட்டா மையங்களுக்கான மின்சார தேவை 85 சதவீதம் வரை உயரும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அணு உலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் இந்த டேட்டா மையங்களுக்கு உயிரோட்டம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+