இந்தியா ஈகாமர்ஸ் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் அமேசான் படிப்படியாகத் தனது ஆதிக்கத்தை மேம்படுத்தத் திட்டமிட்டு அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. ஆனால் சந்தையில் அதிகப்படியான போட்டி இருக்கும் காரணத்தால் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்தியாவில் ஈகாமர்ஸ் சேவையில் குறிப்பாக வாடிக்கையாளர் சேவையில் அதிகப்படியான மதிப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்று இருந்தது. ஆனால் சமீப காலமாக அமேசான் தளத்தில் வாடிக்கையாளர் சேவை மிகவும் மோசமாக உள்ளதாகப் பல அமேசான் வாடிக்கையாளர்களைப் புலம்பி வருகின்றனர்.

இதை மறைக்கும் வகையிலும், தனது ப்ரைம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அமேசான் நிறுவனத்தின் முக்கியமான ப்ரைம் லைட் மெம்பர்ஷிப் கட்டணத்தைக் குறைத்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் ப்ரைம் மற்றும் ப்ரைம் லைட் என்ற இரு சேவைகளை வழங்குகிறது.
தற்போது அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டத்துடன் அதன் மலிவு விலை திட்டமான ப்ரைம் லைட் மெம்பர்ஷிப் கட்டணத்தைத் தற்போதைய 999 ரூபாய் கட்டணத்தில் இருந்து 799 ரூபாயாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் விலையைத் தடையாகப் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரிய அளவில் பலன் அளிக்கும் என அமேசான் இந்தியா நிர்வாகம் நம்புகிறது.
1. ப்ரைம் லைட் மெம்பர்ஷிப் திட்டத்தின் கீழ் ஒரு வாடிக்கையாளர் இப்போது ஒரு நாள், 2 நாள், தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் டெலிவரி, ஆர்டர் செய்யப்பட்ட அதே நாளில் டெலிவரி சேவைகள் கிடைக்கும்.
2. தேர்வு செய்யப்பட்ட நகரங்களுக்கு 25 ரூபாய் கேஷ்பேக் அளிக்கப்படும்.
3. அமேசான் பே கிரெடிட் கார்டு சேவைகளும், தள்ளுபடிகளும் கிடைக்கும்.
4. மினிமம் ஆர்டர் மதிப்பு ஏதுமில்லை, இலவசமான டெலிவரி
5. விளம்பரத்துடன் அமேசான் ப்ரைம் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை. 1 கருவியில் HD தரத்தில் பார்க்க முடியும்.
6. Lightning Deals அனுமதிக்கப்படுகிறது.
7. No Cost EMI சேவை அனுமதி
8. 6 மாதம் இலவசமாக ஸ்கிரீன் ரீப்லேஸ்மென்ட் சேவையும் வழங்குகிறது.
அமேசான் இந்தியாவில் ஈகாமர்ஸ் துறையில் பிளிப்கார்ட் உடன் போட்டிப்போட்டு வரும் வேளையில், வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையில் நெட்பிளிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் உடன் போட்டிப்போட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 200 ரூபாய் தள்ளுபடி பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தை அளிக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications