விதிமீறிய அமேசான்..? முகேஷ் அம்பானிக்குக் கிடைத்த நல்ல செய்தி..!

இந்தியப் பணக்காரரும், நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி டெலிகாம் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து ஆதிக்கம் செலுத்தி வருவது போல் ரீடைல் வர்த்தகத்தையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள பியூச்சர் குரூப் நிறுவனத்தைச் சுமார் 24,713 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது

ஆனால் அமேசான் நிறுவனம் போட்ட. இந்த ஒப்பந்தத்தால் அடுத்தடுத்த தடையின் காரணமாகப் பியூச்சர் குரூப் சொத்துக்களளை ரிலையன்ஸ் ரீடைல் பெற முடியாமல் போனது

இந்நிலையில் அமேசான் பியூச்சர் குரூப் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் விதிமுறை மீறியுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

அமேசானுக்குப் பிரச்சனை

அமேசானுக்குப் பிரச்சனை

ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போராடி வரும் அமேசான், தனது இந்திய வர்த்தகப் பிரிவின் வாயிலாகப் பியூச்சர் குருப் உடன் 2019ஆம் ஆண்டு செய்த ஒப்பந்தம் வாயிலாக, பியூச்சர் குரூப்-ஐ மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் அமேசான் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

விதிமீறல்

விதிமீறல்

அமேசானின் இந்த ஒப்பந்தம் மூலம் FEMA FDI விதிமுறைகளை மீறுவதாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கான பதிலை இன்னும் அமேசான் வழங்காத நிலையில் அமேசானுக்கு இது பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும் இது முகேஷ் அம்பானிக்கு சாதகமாகவும் உள்ளது.

அமேசான் 2019 ஒப்பந்தம்

அமேசான் 2019 ஒப்பந்தம்

அமேசான் நிறுவனம் இந்திய ரீடைல் சந்தையில் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்த 2019ல் கடும் நிதிநெருக்கடியில் சிக்கியிருந்த பியூச்சர் குரூப் குழுமத்தின் கிளை மற்றும் ஹோல்டிங் நிறுவனமான பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.

அமேசான் - பியூச்சர் குரூப்

அமேசான் - பியூச்சர் குரூப்

அமேசான் - பியூச்சர் குரூப் மத்தியில் நடந்த இந்த 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமேசான் பலவேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, சக போட்டி நிறுவனங்களை எந்தக் காரணத்திற்காகவும் பியூச்சர் குரூப் குழுமத்தில் நுழைய விடாத படி ஒப்பந்தம் செய்துள்ளது.

15 நிறுவனங்களுக்குத் தடை

15 நிறுவனங்களுக்குத் தடை

அமேசான் பங்குகளை வாங்கிய பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்படச் சுமார் 15 நிறுவனங்களை வெளிப்படையாகவே குறிப்பிட்டு, இந்த நிறுவனங்கள் எந்தக் காரணத்திற்காகவும் பங்குகளையோ, வர்த்தகத்தையோ கைப்பற்றக் கூடாது எனக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிட்டதக்கது. இதைத் தான் தற்போது நீதிமன்றம் சுட்டிக்காட்டி விதிமீறல் என விளக்கம் கேட்டுள்ளது.

வால்மார்ட் முதல் அலிபாபா

வால்மார்ட் முதல் அலிபாபா

அமேசான் போட்ட ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் தவிர வால்மார்ட், சாப்ட்பேங்க், கூகிள், நேஸ்பர்ஸ், ஈபே, அலிபாபா, டாக்கெட், பேடிஎம், சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு கட்டுப்பாடுகள் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+