பிரபல இ-காமர்ஸ் ஜாம்பவான் ஆன அமேசான் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் செய்தது. இந்த நடவடிக்கையே பெரியளவில் ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
அமேசான் மட்டும் அல்ல, மெட்டா, ட்விட்டர் என வரிசை கட்டி சுமார் 38,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.
இதன் தாக்கமே ஊழியர்கள் மத்தியில் பெரியளவில் இருந்தது. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆண்டி ஜாஸ்ஸி, முதல் முறையாக பணி நீக்க நடவடிக்கைக்கு பிறகு கருத்து தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் தொடரலாம்
அடுத்த ஆண்டிலும் இந்த இகாமர்ஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் என்பது இருக்கலாம். இது வணிக நடவடிக்கைக்கு ஏற்ப இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது மேற்கோண்டு டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கால வணிகத்திற்கு ஏற்ப முதலீடு
குழு தலைவர்கள் தங்களது குழுவில் உள்ள ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களின் குழுவிலுள்ள ஊழியர்களை கண்கானித்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் அவர்கள் செய்ய விரும்பும் முதலீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சேவை செய்ய வேண்டியது அவசியமானது. இது நீண்டகால நோக்கில் வணிக வளர்ச்சிகு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும் என ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
சவாலான காலகட்டம்
நடப்பு ஆண்டில் பொருளாதாரம் மிக சவாலான ஒரு காலகட்டத்தில் இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு கடினமான ஒன்றாக இருந்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக பணியமர்த்தல் செய்து வந்த நிலையில், நடப்பு ஆண்டில் மந்த நிலைக்கு மத்தியில் பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இனியும் தொடரும்
தகவல்கள் படி, பணி நீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களுக்கும், புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிய 60 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணி நீக்கம் வருடாந்திர திட்டமிடல் செயல்முறை தான் என்றும் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த செயல் முறை திட்டமானது அடுத்த ஆண்டிலும் தொடரலாமென நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணியமர்த்தல் முடக்கம்
தொடர்ந்து குழுவில் உள்ள தலைவர்கள் மாற்றம் செய்தால், அதன் முடிவுகள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும். தொடர்ந்து நிறுவனம் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனம் கடந்த காலாண்டில் மிகக் குறைந்த வருவாயினையே கண்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களாகவே பணி நீக்கத்தினை நிறுத்தி வைத்துள்ளோம்.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications