அமேசான் நிறுவனம் தங்களின் கார்ப்பரேட் ஊழியர்களில் 14,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இதுதான் உலகம் முழுவதும் தற்போது பெருமளவில் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் ஒரே நேரத்தில் 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பல்வேறு துறைகளிலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பணிநீக்க அறிவிப்பு மட்டுமல்ல அமேசான் நிறுவனம் எப்படி ஊழியர்களை மோசமான முறையில் வேலையில் இருந்து அனுப்புகிறது என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல ஊழியர்களும் பதிவு செய்து வருகின்றனர்.

அமேசான் நிறுவனம் ஊழியர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறதாம். அதில் நீங்கள் வேலைக்கு புறப்படுவதற்கு முன்பு தயவு செய்து உங்களின் தனிப்பட்ட அல்லது அலுவலகம் சார்ந்த இமெயிலை ஒரு முறை பாருங்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறதாம். இதனை ரெடிட் தளத்தில் ஒரு நபர் பதிவு செய்திருக்கிறார் . அமேசான் நிறுவனம் அனுப்பிய எஸ்எம்எஸ் பகிர்ந்திருக்கும் அவர் அலுவலகத்திற்கு வரும் முன் உங்களுடைய ஈமெயிலை பாருங்கள் உங்களுடைய வேலை குறித்து தகவல் அதில் இடம் பெற்றிருக்கும் என கூறப்பட்டிருக்கிறதாம்.
ஒரு ஊழியர் அதிகாலை 3 மணிக்கு எனக்கு இந்த எஸ்எம்எஸ் வந்தது என கூறியிருக்கிறார் . அந்த நேரத்திற்கு எழுந்து என்னுடைய லேப்டாப்பை ஆன் செய்து என்னுடைய இமெயிலை பார்த்தேன் அதில் நான் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்த மின்னஞ்சல் இருந்தது என சோகத்துடன் பதிவு செய்திருக்கிறார். இதனை அடுத்து எனக்கு படபடத்து போனது என கூறியுள்ளார்.

ஒரு நபர் அமேசான் இப்படி மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுகிறது அது என்ன வேலைக்கு புறப்படுவதற்கு முன் ஈமெயிலை ஒரு முறை செக் செய்யுங்கள் என எஸ்எம்எஸ் அனுப்புவது என கேள்வி எழுப்பு அவர் இதைவிட மோசமாக ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களின் நடத்த முடியாது என சாடி இருக்கிறார். இதற்கிடையே மற்றொரு நபர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவும் கவனத்தை பெற்று இருக்கிறது.
அதில் என்னுடைய நண்பர் அமேசானில் வேலை செய்து வந்தார் தீபாவளிக்காக ஊருக்கு சென்று இருந்த அவர் மீண்டும் பெங்களூர் அலுவலகத்திற்கு வேலைக்கு திரும்பினார். விமானம் ஏறி பெங்களூரு வந்து இறங்கியவுடன் போனை ஆன் செய்த போது தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார் என கூறியிருக்கிறார் .
ஒரு நபர் கடந்த மாதம் தான் என்னுடைய நண்பருக்கு அமேசான் நிறுவனம் மிகச் சிறந்த முறையில் வேலை செய்தீர்கள் எனக் கூறி பதவி உயர்வு அளித்தது .ஆனால் இந்த மாதம் அவரை பணி நீக்கம் செய்திருக்கின்றனர், பணிநீக்கம் செய்வது என முடிவு செய்துவிட்டால் நீங்கள் எவ்வளவு சிறப்பாக வேலை செய்து இருந்தாலும் அவர்களின் கண்களுக்கு அது தெரியாது இதுதான் தற்போது நியூ நார்மல் போல என கூறி இருக்கிறார்.
இதற்கிடையே அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஏன்டி ஜெஸி 14,000 பேர் பணிநீக்கம் செய்வது தொடர்பான முடிவின் பின்னணி குறித்து விளக்கமாக தெரிவித்து இருக்கிறார். அமேசான் நிறுவனத்தின் காலாண்டு நிதி முடிவுகள் வெளியீட்டில் பேசி அவர் 14,000 பேரை பணிநீக்கம் செய்யும் முடிவை நிதி சார்ந்து எடுக்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறார்.
அமேசான் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது , மேலாண்மையிலும் பல அடுக்குகளை இதற்காக நாங்கள் உருவாக்கினோம். ஆனால் இது முடிவெடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது, பல்வேறு குழுக்களுக்கு இடையே பொறுப்புணர்வை குறைத்து இருக்கிறது. இதனால் நிறுவனத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பணிநீக்கம் செய்கிறோம் என விளக்கம் தந்து இருக்கிறார் .
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications