அமேசான் இந்தியா, இந்தியாவில் முதன்முதலாக ப்ளாக் ஃப்ரைடே விற்பனையை துவங்கியுள்ளது. அமெரிக்காவில் பொதுவாக இரண்டு விற்பனைகள் களை கட்டும். ஒன்று பிளாக் ஃப்ரைடே விற்பனை, மற்றொன்று கிறிஸ்துமஸ் விற்பனை. இந்த விற்பனையின் போது எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படும். அதேபோல தற்போது அமேசான் இந்தியாவிலும் முதல்முறையாக இந்த விற்பனை கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதைய விற்பனையின் போது அமேசான் இந்தியா ஆப்பிள், சோனி, சாம்சங் மற்றும் அமாஸ்ஃபிட் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளுக்கு தள்ளுபடி வழங்குகிறது.
மேலும் நைக், அடிடாஸ், டாமி ஹில்ஃபிகர், ஜீன்-பால், கால்வின் க்ளீன் மற்றும் பல சிறந்த லைஃப்ஸ்டைல் பிராண்டுகளிலும் நல்ல சலுகைகளை வழங்க உள்ளது. புதிய பிளாக் பிரைடே விற்பனை குறித்து ஒரு அறிக்கையில் தெரிவித்த அமேசான் இந்தியாவின் துணை தலைவரான சௌரப் ஸ்ரீவஸ்தவா, "அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரிய தள்ளுபடிகளை வழங்கியது. இப்போது அமேசானின் ப்ளாக் ஃப்ரைடே விற்பனையை முதல் முறையாக இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளில் அதிக தள்ளுபடி வழங்கியுள்ளோம். வாடிக்கையாளர்கள் தங்கள் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த எங்களுடைய அர்ப்பணிப்பை இது சுட்டிக்காட்டுகிறது", என்று தெரிவித்திருந்தார்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 75% தள்ளுபடி: ஆப்பிள் மேக்புக் ஏர், ஐபோன் 15 லைன்அப், சாம்சங் கேலக்ஸி எஸ்23, சாம்சங் கேலக்ஸி பட்ஸ் போன்ற பல மொபைல் எலக்ட்ரானிக் மற்றும் அக்சஸரீஸ்-க்கு 40 முதல் 75 சதவீதம் வரை அமேசான் நிறுவனம் சலுகை வழங்குகிறது.
சியோமி பிராண்டுக்கு ஆச்சரியம் அளிக்கும் தள்ளுபடி: அமேசான் நிறுவனம் சியோமி 32 இன்ச் ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி, சோனி ப்ளே ஸ்டேசன் 5 டிஜிட்டல் மற்றும் சோனி ப்ளே ஸ்டேசன் டிஜிட்டல் எடிஷன் ஸ்லிம் ஆகியவற்றுக்கும் அதிக தள்ளுபடிகளை வழங்குகிறது.
வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி: அமேசான் இந்தியா பேனாசோனிக், எல்ஜி, சாம்சங் போன்ற ஏர் கண்டிஷனர்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது மற்றும் லக்ஸரி பிராண்டுகளுக்கு 40 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நடப்பு விற்பனையின் போது டாபர், செபாமெட் லோஷன்ஸ் மற்றும் டாடா டீ போன்ற பிராண்டுகளிலும் குளிர் கால அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பருவ கால பொருட்களிலும் தள்ளுபடி வழங்கவுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications