டெல்லியில் நடைபெற்று வரும் India AI Impact Summit-ஐ அம்பானி மற்றும் அதானி குழுமங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு டெக் ஊழியர்களையும், நிபுணர்களையும் தேடும் மிகப்பெரிய மைதானமாக மாற்றியுள்ளன. இந்திய ஏஐ துறையில் வேமாக வளர்ச்சி அடைந்து வருவது ஒருப்பக்கம் இருந்தாலும், வேலைவாய்ப்பு, முதலீடு, வருமானம் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் அம்பானி மற்றும் அதானி குழுமங்கள் ஏஐ டேட்டா சென்டர்களை அமைக்க ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய தயாராகியிருக்கும் வேளையில் பட்ஜெட் மூலம் வரி சலுகையும் கிடைத்தது. இந்த நிலையில் அம்பானி மற்றும் அதானி குழுமங்களுக்கு முக்கிய தேவையாக இருப்பது ஏஐ நிபுணர்கள், இந்தியாவுக்கு ஏஐ என்பது புதியது என்பதால் திறன்வாய்ந்த நபர்களை தேடுவது என்பது கடுமையான சவாலாக இருக்கும் வேளையில் டெல்லியில் நடக்கும் AI Impact Summit-ஐ தனது நிறுவனத்திற்கான இன்டர்வியூவ் தளமாக மாற்றியுள்ளது.
இந்தியாவில் AI டூல்ஸ் மற்றும் அப்பிளிகேஷன்களை உருவாக்கும் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், Reliance Industries மற்றும் Adani Group நிறுவனங்கள் இளம் பொறியாளர்களைத் தேர்வு செய்ய 'வேட்டை'யில் ஈடுபட்டுள்ளன. இந்த AI Impact Summit கூட்டத்திற்கு ரெஸ்யூம், GitHub ப்ராஜெக்ட்கள் உடன் கொண்டு இளைஞர்களை வாரியணைத்துக்கொள்கிறது. அதானிகானெக்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பிரியான்ஷி பவிஷி கூறுகையில், "AI துறை இன்னும் நிச்சயமற்ற துறையாக இருப்பதால், தகுதியான திறமைகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. இந்த சம்மிட் திறமைகளை கண்டுபிடிப்பதற்கு சிறந்த இடம்" என்றார்.

இந்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் Alphabet (Google) CEO சுந்தர் பிச்சை, OpenAI CEO சாம் ஆல்ட்மேன் போன்ற உலகளாவிய டெக் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முக்கிய உரையாற்றவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இது இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிபுணர்களின் திறமையை காட்டும் இடமாகவும், AI உலகில் முன்னேறும் திறனை உலக அரங்கில் காட்டும் மேடையாக அமைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் AI துறை தொடர்பாக சுமார் 50 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகள், IIT Madras, Anna University, VIT, SRM, PSG போன்ற நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு AI Impact Summit- பெரும் வாய்ப்பு. இதேபோல் டெக் நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டு ஏஐ துறையில் சேரவேண்டும் என ஆர்வமாக இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் இந்த கூட்டம் முக்கியமான வாய்ப்பாக உல்ளது. கோயம்புத்தூர், ஓசூர், திருப்பூர் போன்ற Tier-2 நகரங்களில் உள்ள திறமையான இளைஞர்கள் டெல்லி AI Impact Summit-க்கு சென்றால் Reliance, Adani குழுமங்களை தாண்டி ஏஐ துறையில் அசத்தி வரும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களை ஒருசேர சந்திக்கலாம்.


Click it and Unblock the Notifications