இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப், டாடா குழுமம் ஆகியவை ஏற்கனவே பல ஆயிரம் கோடியை FMCG துறையில் முதலீடு செய்து பெரும் வர்த்தகத்தைக் கைப்பற்றியிருக்கும் வேளையில், இத்துறையில் முன்னோடியாக இருக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி போன்ற நிறுவனங்கள் உடன் நேரடியாகப் போட்டிப்போடும் திட்டத்துடன் அடுத்த கட்ட முதலீடுகளைச் செய்ய உள்ளது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு சேவைத் துறையில் மூடசூடா மன்னனாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது FMCG பிரிவில் 3900 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

துறைமுகம், விமான நிலையம் என உள்கட்டமைப்பு துறையில் கிங்மேக்கராக இகுக்கும் அதானி குழுமத்தின் FMCG பிரிவு நிறுவனமான அதானி வில்மார் இத்துறையில் 3 புதிய பிராண்டுகளை மொத்தமாகக் கைப்பற்றும் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆட்டோமொபைல் முதல் டீ தூள் தயாரிப்பு வரையில் மாஸ் காட்டி வரும் டாடா குழுமத்தின் FMCG பிரிவான டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த வருடம் மட்டும் 785 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதேபோல் Tata Consumer Soulfull, NourishCo Beverages, Tata SmartFoodz ஆகிய 3 கிளை நிறுவனங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு அதன் வர்த்தகத்தை மேம்படுத்தப் பெரிய திட்டத்தைத் தீட்ட துவங்கியுள்ளது.
இப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப், டாடா குழுமம் ஆகிய 3 வர்த்தக சாம்ராஜ்ஜியங்களும் வெவ்வேறு துறையில் அதிக வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற்று வரும் வேளையில் FMCG துறையில் இறங்கி இத்துறையில் இருக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, நெஸ்லே இந்தியா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், காட்ரிஜ், மாரிகோ, கோல்கேட் பால்மோலீவ் ஆகியவற்றுடன் நேரடியாகப் போட்டிப்போட என்ன காரணம்..?
2028ஆம் நிதியாண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை ஓரம்கட்டிவிட்டு 5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என பல கணிப்புகள் கூறும் வேளையில், இதில் அதிகம் பலன் அடையப்போவது FMCG துறை தான்.
உலகின் எந்தொரு நாடாக இருந்தாலும் மக்கள் கையில் அதிகமாகப் பணம் கிடைக்கும் போது நுகர்வு அதிகரிக்கும். அப்படி நுகர்வு அதிகரிக்கும் பட்சத்தில் முதல் பலன் அடைவது இந்த FMCG துறை தான், இதனால் இந்த ஈசி வர்த்தகத்தை விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப், டாடா குழுமம் ஆகியவை FMCG துறையில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர்.
உலகிலேயே வேகமாக வளரும் சந்தைகளில் ஒன்றாக இகுக்கும் இந்தியச் சந்தை 2027ஆம் ஆண்டில் 1.4 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தாண்டும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2030ல் உலகின் 3வது பெரிய ரீடைல் சந்தையாக இந்தியா இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
இதைவிட முக்கியமாக 2023ல் இந்தியாவில் சுமார் 40 மில்லியன் மக்கள் மிகவும் அதிகம் செலவு செய்யக்கூடிய பிரிவில் இருப்பதாக UBS கணித்திருந்த நிலையில், அடுத்த 5 வருடத்தில் இதன் எண்ணிக்கை 88 மில்லியனாக உயரும் எனக் கணித்துள்ளது. இந்த பிரிவினரை எப்படியாவது தனது வாடிக்கையாளராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே இலக்குடன் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப், டாடா குழுமம் ஆகியவை களமிறங்கியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications