அதே 3 லட்சம் கோடி.. கபாலி ரஜினி மாதிரி திரும்பி வந்த முகேஷ் அம்பானி..!!

2023ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹூரன் இந்தியா வெளியிட்டு உள்ளது, இந்த பெருமை மிக்க பட்டியலில் இடம்பெற அடிப்படை தகுதி 1000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு. இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் மொத்த பணக்காரர்கள் எண்ணிக்கை முதல் முறையாக 1300 க்கு மேல் சென்றுள்ளது.

இது மட்டும் அல்லாமல் கடந்த வருடத்தை காட்டிலும் 216 பேர் அதிகமாக சேர்ந்துள்ளனர். மேலும் கடந்த 5 வருடத்தில் இந்திய பணக்காரர்கள் எண்ணிக்கை ஹூரன் தரவுகள் படி 76 சதவீதம் அதிகரித்துள்ளனர். இதில் பணக்காரர்கள் என குறிப்பிடப்படுவது 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்கள்.

அதே 3 லட்சம் கோடி.. கபாலி ரஜினி மாதிரி திரும்பி வந்த முகேஷ் அம்பானி..!!

மேலும் 2023 ஹூரன் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு 109 லட்சம் கோடி ரூபாய், இது சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமிரீகம், சவுதி அரேபியா நாடுகளின் மொத்த ஜிடிபி அளவை காட்டிலும் அதிகமாகும். இந்த பெருமை மிகக்க பட்டியலில் 66 வயதான முகேஷ் அம்பானி சுமார் 8.08 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் 2022 பட்டியலில் முதல் இடத்தில் இருந்த கௌதம் அதானியை பின்னுக்கு தள்ளியுள்ளர் முகேஷ் அம்பானி. 2022 ஆம் ஆண்டில் கௌதம் அதானி முதல் இடத்தில் இருக்கும் போது இவருக்கும் முகேஷ் அம்பானிக்கும் மத்தியிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 3 லட்சம் கோடி ரூபாய். 2023ல் 3.3 லட்சம் கோடி ரூபாய் வித்தியாசத்தில் முகேஷ் அம்பானி கௌதம் அதானியை முந்தியுள்ளார்.

இவ்விருவரையும் தாண்டி 2.78 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3வத இடத்தில் சைரஸ் பூனாவாலா இருக்கிறார், ஆனால் போர்ப்ஸ் பட்டியலின் படி 28.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் HCL நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார்.

360 ஓன் வெல்த் ஹூரன் இந்தியா ரிச் லிஸ்ட்டில் முதல் முறையாக ஒரு தனியார் பங்கு முதலீட்டு மேனேஜர் இடம்பெற்றுள்ளார். KEDAARA CAPITAL நிறுவனத்தின் மனிஷ் கெஜரிவால் 3000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இளம் பணக்காரர்: அனைத்து பணக்காரர்கள் பட்டியலிலும் இளம் பணக்காரர் யார் என்பதை தெரிந்துக்கொள்வதில் பெரும் ஆர்வம் இருக்கும், அந்த வகையில் 20 வயதான ZEPTO நிறுவனரான வைவல்யா ஹோக்ரா இடம்பெற்றுள்ளார். 10 வருடத்திற்கு முன்பு இப்பட்டியலில் இளம் பணக்காரரின் வயது 37 தற்போது வெறும் 20 ஆக குறைத்துள்ளது.

பைஜூஸ் வீழ்ச்சி: இந்தியாவின் மிகப்பெரிய EDTECH நிறுவனமாக இருக்கும் பைஜூஸ் பல பிரச்சனைகள் மத்தியில் அதன் மதிப்பீடு குறைந்த காரணசத்தால் பைஜூஸ் ரவிந்திரன் சொத்து மதிப்பு 1000 கோடி ரூபாய்க்கு கீழே சென்றதால் கடந்த வருடம் வரையில ஹூரன் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று இருந்த பைஜூ ரவிந்திரன் இந்த வருடம் இடம்பெறவில்லை.

Age is Just Number என்பதற்கு ஏற்றார் போல் 94 வயதான மகேந்திரா ரதிலால் மேத்தா இப்பட்டியலில் வயதான பணக்காரராக இடம்பெற்றுள்ளார். இவர் பிரிசிஷன் வையர்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

டாப் 10 பட்டியலில் இந்த வருடம் வினோத் அதானி மற்றும் உதய் கோட்டாக் வெளியேறிய காரணத்தால் குமார் மங்களம் பிர்லா, நீரஜ் பஜாஜ் ஆகியோர் நுழைந்தனர். மேலும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்எள 84 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு 4,23,600 கோடி ரூபாய். இவர்களுடைய சராசரி வயது 41.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+