இந்திய பொருளாதார தளத்தில் தலைமைப் பதவிகளும் சொத்துகளும் கோடீஸ்வர குடும்பங்களில் மாறுவது சகஜம். அப்படி இந்தியாவின் பெரும் வர்த்தக குடும்பங்களில் பிரபலமாக இருக்கும் வாரிசுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆகாஷ், ஈஷா, ஆனந்த் அம்பானி: முகேஷ் அம்பானியின் பிள்ளைகளான ஆகாஷ், ஈஷா, ஆனந்த் அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். ரிலையன்ஸ் ஜியோவின் டைரக்டராக ஆகாஷ் உள்ளார்.

ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனங்களில் டைரக்டராக ஈஷா பதவி வகிக்கிறார். முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் போர்டின் இயக்குநராக 2020 மார்ச்சில் இருந்து உள்ளார்.
வாரிசுகளின் ஒருங்கிணைந்த தலைமையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சீரான வளர்ச்சியை பெற்று வருகிறது. உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர சொத்து மதிப்பு 9.03 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
கரண் அதானி: கௌதம் அதானியின் மகனான கரண் அதானி அதானி போர்ட்ஸ் மற்றும் செஸ் லிமிடெட்டின் சிஇஓவாக உள்ளார்.
அதானி போர்ட்ஸின் விரிவாக்கம், துறைமுக செயல்பாடுகள், லாஜிஸ்டிக்ஸ் திறனை வளர்ப்பதில் கரண் அதானி முக்கிய பங்கு வகிக்கிறார்.
அதானி குரூப்பின் நிறுவனர் கௌதம் சாந்திலால் அதானி. போர்ப்ஸ் மதிப்பின்படி அவரது அதானி குரூப்பின் நிகர மதிப்பு 77.8 பில்லியன் டாலர்கள் ஆகும்.
நவீன் ஜிண்டால்: பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டாலும் அவரது மனைவியின் சொத்து மதிப்பும் ரூ.1000 கோடி என தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற நவீன் ஜிண்டால் ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். ஜிண்டாலின் மதிப்பு ரூ.88,673.68 கோடி என கூறப்பட்டுள்ளது.
ரோஷ்ணி நாடார்: ஹெச்சிஎல் டெக்னாலஜீஸின் தலைவரான ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்ணி நாடார். ஹெச்சிஎல்லின் உலகளாவிய விரிவாக்கத்துக்கு ரோஷ்ணி நாடார் முக்கியப் பங்கை ஆற்றி வருகிறார். அத்துடன் ஷிவ் நாடார் பவுண்டேஷனின் தலைவராகவும் அவர் உள்ளார்.
ஆலோக் சங்வி: சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிறுவனரான திலீப் சங்வியின் மகன் ஆலோக் சங்வி. 5 பில்லியன் மதிப்புள்ள இந்தியாவின் முதல் பார்மாசூட்டிகல் கம்பெனியாக சன் பார்மாசூட்டிகல் உருவெடுத்துள்ளது.
அதன் எக்ஸிகியூட்டிவ் டைரக்டராக ஆலோக் சங்வி உள்ளார்.
அவரது சீரிய தலைமையில் அந்த நிறுவனம் பெரும் வளர்ச்சியை பெற்று வருகிறது.
அதார் பூனவாலா: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை எக்ஸிகியூட்டிவ் அதிகாரி அதார் பூனவாலா. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் திகழ்கிறது.
அதார் பூனவாலா தனது தந்தையிடமிருந்து நிறுவனத்தின் சிஇஓ பதவியை 2011இல் பெற்றார்.
2017இல் அதார் பூனவாலாவை ஸ்வாச் பாரத் பிரசாரத்தின் பிராண்டு அம்பாசிடராக பிரதமர் நரேந்திர மோடி நியமித்தார்.
சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவின் நிகர மதிப்பு 21.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.
சைரஸ் பல்லோன்ஜி மிஸ்திரி: கோடீஸ்வரர் பல்லோன்ஜி மிஸ்திரியின் மகன் சைரஸ் பல்லோன்ஜி மிஸ்திரி. அயர்லாந்தில் வசித்தாலும் சைரஸ் இந்தியாவில்தான் பிறந்தார். ஷாபூர்ஜி பல்லோன்ஜி குரூப் பல்வேறு நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறது. புளூம்பெர்க் மதிப்பின்படி சைரஸ் மிஸ்திரியின் நிகர மதிப்பு 16 பில்லியன் டாலர்கள் ஆகும்.
அனன்யா, ஆர்யமான் விக்ரம் பிர்லா: குமார்மங்கலம் பிர்லாவின் பிள்ளைகள் அனன்யா, ஆர்யமான் பிர்லா. அனன்யா ஒரு தொழில்முனைவோராகவும் இசையமைப்பாளராகவும் உள்ளார். ஸ்வததந்ரா மைக்ரோபின் நிறுவனத்தை தொடங்கி கிராமப்புற பெண்களுக்கான மைக்ரோ பைனான்ஸ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அண்மையில் இசையில் மீதிருந்த நாட்டத்தை விட்டுவிட்டு தொழிலில் கவனம் செலுத்த தொடங்கினார். இது தனக்கு மிகவும் கஷ்டமான விஷயமாக இருந்தாலும் ஸ்வதந்த்ரா மைக்ரோபின் நிறுவனத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியுள்ளது என்று அனன்யா கூறினார்.
ஆர்யமான் பிர்லா ஆதித்யா பிர்லா குரூப்பில் சேரந்துள்ளார்.
அதன் கார்ப்பொரேட் திட்டங்கள், பிசினஸ் விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிசினஸில் ஈடுபடுவதற்கு முன்பாக அவர் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்தார். 2017இல் அண்டர் 23 கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிக ஸ்கோர் எடுத்த பேட்ஸ்மேனாக இருந்தார். பிர்லா குரூப்பின் நிகர சொத்து மதிப்பு 20.9 பில்லியன் டாலர்கள் ஆகும்.
மது சாந்தக், மாஞ்ரி சாந்தக், ஜோதி காப்ரா: ராதாகிஷண் தமனியின் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிட்டெட்டில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராதாகிஷண் தமனியின் பிள்ளைகளான இவர்கள் டி மார்ட்டின் சிஎஸ்ஆர் நடவடிக்கைகள், பிசினஸ் செயல்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
போர்ப்ஸ் கணிப்பின்படி அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் மதிப்பு 20.6 பில்லியன் டாலர்கள் ஆகும். அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் டைரக்டராக மஞ்ரி சாந்தக் உள்ளார். அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் உள்பட அவர் ஏழு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். மெர்ச்சண்டைசிங்கை கவனித்து வருகிறார்.
ஜோதி காப்ரா அன்றாட மெர்ச்சன்டைசிங் மற்றும் கன்ஸ்யூமர் பிசினஸை கவனித்து வருகிறார். அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் நிகர மதிப்பு ரூ.3.15 லட்சம் கோடியாகும்.
ஆதித்யா மிட்டல்: ஸ்டீல் வியாபார கிங்கான லட்சுமி மிட்டலின் மகன் ஆதித்யா மிட்டல். உலகின் மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்சிலார் மிட்டலின் சிஇஓவாக ஆதித்யா மிட்டல் உள்ளார். நிறுவனத்தின் விரிவாக்கத்தில் முக்கியப் பங்கெடுப்பை செய்கிறார். நிறுவனத்தின் நிகர மதிப்பு 919 மில்லியன் டாலர்கள் ஆகும்.
story written by: Jayachandran
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications